Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 142


படித்திட்டேனின்னமொன்று பகரக்கேளு
பரமகுரு சனிசெவ்வாய் புந்தியோடு
அடித்திட்டே னம்புலியும் வெள்ளிமேவ
அப்பனே அண்டங்கள் அளவெடுப்பன்
குடித்திட்டேன் குருபுந்தி சனிசேய்யிந்து
கொற்றவனே சோந்திருக்க தரித்திரதோஷம்
இடித்திட்டேன் போகருட கடாட்சத்தாலே
இதமான புலிப்பாணி சாற்றினேனே.


மேலுமொரு கருத்தினையும் கூறுகிறேன். கேட்பாயாக! பிரசித்தமான குருபகவானும் சனி, செவ்வாய், புதன் இவர்களோடு கூடிநிற்கவும் சந்திரனுடன் சுக்கிரனும் சேரவும் அச்சாதகன் அண்டங்களை அளவெடுப்பவனாக இருப்பான். இன்னுமொன்று குருவும் புதனும் சனி மற்றும் செவ்வாய் என்பதனைப் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்..

No comments:

Post a Comment