Monday, 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 136


ஆரப்பா அம்புலியும் ரவியும்சேர
அப்பனே தனமுண்டுகளத்திரநேசன்
ஆரப்பா அரசனுடன் அருக்கன்சேர
அரசனொடு அயிஸ்வரியம் மெத்த உண்டு
ஆரப்பா அசுர குருவெய்யோன்மேவ
அப்பனே வசியனடா களத்திரபோகி
ஆரப்பா அசுரகுரு நீலன்மேவ
அடங்காத களத்திரமா மறிந்துசொல்லே.


இன்னொரு கருத்தினையும் கவனத்துடன் கேட்பாயாக! சந்திரனுடன் சூரியன் சேர்ந்து ஒரு மனையில் நிற்க அவன் தனவான்: களத்திரத்திடம் அளவற்ற நேசம் உடையவன். அதே போல் அரசன் எனப் புகலப்படும் குருவுடன் சூரியன் சேர அவனுக்கு அரச செல்வம் வாய்த்து ஐசுவரின் எனப்புகலப்படுவான். அசுர குருவான சுக்கிரனுடனும் அனலனாகிய சூரியன் சேர, அவன் மிகுந்த வசிய முடையவன். களத்திரத்திடம் போகம் அனுபவிப்பதில் மிகச் சிறந்தவன். அதே போல் சுக்கிரனுடன் சனி கூடினால் அவனது களத்திரம் அவனுக்கு அடங்காதவளாக அமைவாள் என்பதையும் உணருக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment