பாரப்பா ஈரிரண்டு தனில் யிருநான் கொன்றில் |
மற்றொரு கருத்தினையும் நீ மனங் கொள்வாயாக! இலக்கினத்திற்கு நான்கு-எட்டு-ஒன்றாம் இடம் ஆகியவற்றில் பகலவன் எனப்பகரும் சூரியனும் புதனும் கூடி நிற்க அவர்களை குருவும் பத்தாமிடத்ததிபதியும் கண்ணுற்றாலும் அவன் இந்நிலவுலகில் புகழ்பரப்பிப் பெருஞ் செல்வனாக இருப்பான் அவனுக்கு நிறையக் குதிரைகளும் விளைவயலும் தோப்பும் துரவும், மற்றும் ஏவலாட்களும் மிகவுண்டு அவனுக்கு வெகுதனம் வாய்ப்பதாகும். அவனது ராசியின் பலம் அறிந்து பலன் கூறுக என்பதைப் போகரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment