ஆமப்பா இன்னமொன்று அரையக்கேளு |
வேறொன்றையும் கூறுகிறேன் அதனையும் நீ அன்புடன் கேட்பாயாக! சந்திரனும் ஆறுக்குடையவனும் ஒன்பதாம் பாவகத்திற்குரிய சூரியனும் ஆகிய இம்மூவர் இலக்கினத்திற்கு நான்கில் குடியிருக்க அச்சென்மனுக்கு மனிதர்களால் சுகமில்லை என்றே கூறுக. அப்புதல்வனைப் பெற்றெடுத்த பொற்கொடி போன்ற அன்னை சோர புருஷனோடு சுகித்திருப்பாள். வினைப்பயனை யாரோ விலக்க வல்லவர்கள்? இதனையும் போகர் அருளாலே புலிப்பாணி நவின்றிட்டேன்.
No comments:
Post a Comment