Tuesday, 14 August 2012

நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து மதுவை ஊற்றிக் குடித்தவன்!!

 


 
யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?
இவர் ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். இவருடைய மூதாதையர் யூதர்கள்.
இவருடைய பாட்டனார்களிடம் எபிரேய மொழியும் சோதிடமும்
'கபாலா'(Kabbala) எனப்படு யூத மர்ம சாஸ்திரமும் கற்றார். அதன்பின்னர் மருத்துவக்கல்வி பயின்று டாக்டர் ஆனார்.அக்காலத்திய சமய சித்தாந்தங்களையும் தெளிவாகக் கற்றார்.பரவியிருந்த பிளேக் நோயை ஏதோ ஒரு ரகசிய முறையைப் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தார். மற்றவர்களால் குணப்படுத்தமுடியாத
பலவியாதிகளையும் அவராலே தீர்க்க முடிந்தது.
பிறகு யாருக்குமே தொ¢யாமல் ரசவாத வித்தை, மந்திரவாதம்,ஞான வித்தை முதலியவற்றையும் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகளில்
மருத்துவத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றார். பல
காரணங்களால் அவர் ஒரு நாடோடியாக விளங்கினார்.
ஸ்காலிஜர் என்னும் இன்னொரு ஞானியிடம் மேலும் பல மர்ம சாஸ்திரங்களின் நுணுக்கங்களை அறிந்துகொண்டார்.
அக்காலத்தில் கத்தோலிக்க சமயத்தில் இன்க்விஸிஷன்(Inquisition)
எனப்படும் சமயச்சீரமைப்பு நடைபெற்று வந்தது. சமயத்தினுள்
புகுந்துவிட்ட பலவகையான கோட்பாடுகளையும் பகுத்தறிவு
வாதத்தையும்
ஆராய்ச்சிகளையும் நீக்குவதற்கு மிகக்கடுமையான விசாரணைகளையும்,சித்திரவதைகளையும், தண்டனைகளையும்
சமய அதிகாரிகள்
கடைபிடித்துவந்தனர்.

Nostredame's claimed birthplace before its recent renovation, Saint-Rémy-de-Provence

நாஸ்ட்ரடாமஸின் ரகசிய மருத்துவ முறைகள், சோதிடஞானம், மந்திரவாதம் முதலியவைகள் அந்த கத்தோலிக்க சமய அதிகாரிகளை ஈர்த்திருந்தன. ஆகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 'இன்குவிஸிஷன்' விசாரணையில் கடுமையான சித்திரவதைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். பலவகையான சித்திரவதைகளுக்குப் பின்னர்,
விசாரிக்கப்பட்டவர் விசாரணையின் முடிவில் - உயிரோடு இருந்தால் பெரும்பாலும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு உயிருடன்
கொளுத்தப்படுவார்.

ஒருமுறை ஒரு சிறு கிராமத்திலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த இளம் சன்னியாசி ஒருவரைக் கண்டார். உடனே
அவர் இருந்த இடத்திற்குச்சென்று தொப்பியைக் கழற்றிவிட்டும் மண்டியிட்டு அந்த சன்னியாசியின் அங்கியின் நுனியை எடுத்து வணக்கத்துடன்
முத்தமிட்டார். ஒன்றுமறியாத சன்னியாசி காரணம் கேட்டதற்கு அவர் பிற்காலத்து போப் ஆண்டவருக்குத் தம் வணக்கத்தைத் தெரிவித்ததாகக் கூறினார்.

Nostradamus' current tomb in the Collégiale Saint-Laurent, Salon, into which his scattered remains were transferred after 1789.

1551-ஆம் சோதிடக்கணிப்புகளை 1550-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.
அவர ்கூறியபடி அத்தனை நிகழ்ச்சிகளுமே நடந்துவிட்டன. ஆகவே அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சொந்தமாகப் பஞ்சாங்கம் தயா¡¢த்து வெளியிடலானார்.

இச்சமயத்தில்தான் உலகின் வருங்காலத்தைப் பற்றி ஆராயலானார்.ஈராண்டுகள் மிகவும் பிரயாசைப்பட்டு கி.பி.1553-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 3797-ஆம் ஆண்டுவரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளச்சுலோகங்களாக இயற்றிவைத்தார்.

ஹென்றி மன்னனுக்கு மரண ஆரூடம்

அப்போது பிரான்ஸை ஆண்டவர் இரண்டாம் ஹென்றி மன்னர். அவர் எப்போது எப்படி இறப்பார் என்று முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ் தம்முடைய சுலோகத்தில் கூறியிருந்தார். அதன்படி ஒரு வீர விளையாட்டின்போது அவர் இறந்தார். அப்போது அவர் அணிந்திருந்த
பொன்னாலான முகக்கவசத்திலுள்ள துவாரத்தின் வழியாக போட்டியாளா¢ன்
ஈட்டி நுழைந்து அவருடைய கண்ணில் பாய்ந்து மூளைக்குச் சென்று முனை முறிந்து விட்டது. கவசத்தையும் கழற்றமுடியாமல் ஈட்டிமுனையையும் எடுக்க முடியாமல் ஹென்றி துடிதுடித்து இறந்தார்.

இதையெல்லாம் முன்கூட்டியே அறிவித்த நாஸ்ட்ரடாமஸின் சுலோகங்களால் கவரப்பட்டாள் பிரெஞ்சுப் பேரரசி, கேத்தா¢ன் டி மெடிச்சி.ஸொலோன் நகரத்துக்கு தானே நோ¢ல் சென்று நாஸ்ட்ரடாமஸைக் கேத்தா¢ன் சந்தித்தார். 45 நாட்கள் மந்தி¡£கம், ஆவிகளின் தொடர்பு, வானநூல் போன்ற முறைகளைக் கடைபிடித்து வருங்கால நிகழ்ச்சிகளை ஒரு கண்ணாடியின் மூலம் பேரரசியைக் காணவைத்தார்.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.


நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு
இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.


மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது.
நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.
சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன்கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவா¢ல் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது.
உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.
சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச்சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸ¤க்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தொ¢ந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

"புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச்
சென்றுகொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

Michel de Nostredame

Nostradamus: original portrait by his son Cesar
Born 14 December or 21 December December 1503
Saint-Rémy-de-Provence, France
Died 2 July 1566 (aged 62)
Salon-de-Provence, France
Occupation Apothecary, author, translator,astrological consultant
Known for Prophecy

No comments:

Post a Comment