Tuesday, 14 August 2012

இரத்தின களஞ்சியம் அமிதிஷ்ட்

இரத்தின களஞ்சியம்
அமிதிஷ்ட்



அமிதிஷ்ட் என்ற இரத்தினத்தை தமிழில் `செவ்வந்திக்கல்' என்பர். இதனுடைய நிறம் Purple (செவ்வந்தி). இது சிலிகா என்னும் Chemical Groupஐ சார்ந்தது. இதன் உருவம் ஸ்படிக உருவ அமைப்பில் இருக்கும். இது metamafic ரக பாறைகளில் இருக்கும்.

ஆறு பட்டைகள் கொண்ட வடிவத்தில் இருக் கும். மங்கலான கற்களிலிருந்து தெள்ளத்தெளி வான கற்கள் வரை இருக்கும். பூமியில் நிறைய இருப்பதினால் இது அனைவரும் வாங்கக் கூடிய அளவிலேயே இருக்கும். இதனுடைய விளைச்சல், தரம் இவற்றைக் கொண்டுதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதிக ஒளி ஈர்ப்பு உள்ள கற்கள் அதிக விலையிலும், மந்தமாகவும், நிறம் குறைவாக வும் உள்ள கற்கள் விலை குறைவாகவும் இருக் கும். இது குஞுட்டி Semi Precious (உப ரத்தினம்) வகை யைச் சார்ந்தது. யார் வேண்டுமானாலும் அணிய லாம்.
ஒருவரின் ராசி, லக்னம், நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் இந்த Amethyst டை அணியலாம். Amethyst சுத்தமாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.

Amethyst டை சிறு குழந்தை முதல் முதியவர் வரை எந்த அளவிலும் அணியலாம். எந்த உருவ அமைப்பிலும் Amethyst டை அணியலாம். இந்த உலோகத்தில்தான் பதிக்கப்பட வேண்டும் என்ற எந்தக் கோட்பாடும் கிடையாது.

மேலும் கனக புஷ்பராகம் அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அணிய இயலாத போது, இந்த Amethyst மாற்று இரத்தினமாக அணியலாம்.

3ஆம் எண் சார்ந்தவர்கள் Amethystடை அதி கப்படியாக உபயோகிக்கலாம். Amethyst இரத்தி னங்களாக மட்டும் இல்லாமல் மாலை வடிவங் களாகவும் கிடைக்கிறது.

இந்த மாலை வடிவங்களில் கிடைக்கும் Amethyst பெரும்பாலும் 3rd qualityக்கு கீழ் உள்ள வகையில்தான் கிடைக்கும்.

அதை அணியும்போது அழகுபடுத்த மட் டுமே உதவும். மேலும் Amethyst பிரமிட் உரு விலும், Cristal Pencil வடிவிலும் கிடைக் கும். ரெய்கிற்காக இதை பலர் உபயோ கிக்கின்றனர்.


Amethystன் பலாபலன்கள்:

ஒருவர் Amethystடை அணியும்போது மனதில் சந்தோஷம் இருக்கும். கெட்ட எண் ணங்கள் விட்டு விலகும். மனத்தெளிவு பெறுவர். குழப்பங்களிலிருந்து விடுபடுவர்.

Amethystøhடை வீட்டில் வைக்கும்போது நல்ல அதிர்வுகளை வீட்டில் இருப்பவர்களால் உணரமுடியும். உதாரணமாக, ஒருவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் படுத்த படுக்கை யாக இருந்தால் அந்த அறையினுள் செல்லும் போது ஒரு வகையான இறுக்கம் இருக்கலாம். அந்த இடங்களில் இந்த Amethyst பிரமிட்டை யோ, Amethyst பென்சிலையோ நன்றாகச் சுத்தி கரித்தபின் அங்கு வைத்தால் அந்தச் சூழ்நிலை மாறுவதை உணர முடியும்.

குரு கிரகத்தின் ஒளிக்கதிர்கள் யாரெல்லாம் ஜாதக ரீதியாகப் பெற வேண்டும் என்றுள்ளதோ அவர்களெல்லாம் சரியான அளவில் Amethyst அணியும் போது பலன் நிச்சயம் கிடைக்கும். Amethyst வேறு கற்களுடன் சேர்ந்து அணியும் போது அதை அழகுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.

அதாவது, Amethyst, வைரம், மாணிக்கம் போன்றவற்றைச் சேர்த்துச் செய்த ஆபர ணங்களை விருந்துபசாரங் களின் போது அழகு சேர்க் கப் பயன்படுத்தலாமே அன்றி, ராசிக்காக இவ்வாறு கலந்து அணியக் கூடாது.

அழகுக்காக அணியும் Amethyst பதித்த ஆப ரணங்களை யார் வேண்டுமானாலும் மாற்றி அணியலாம். ஆனால் Amethyst மட்டும் பதித்த மோதிரத்தையோ, டொலரையோ, தினமும் ஒரு வர் அணியும் தறுவாயில் அதை மற்றவர் மாற்றி அணியக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அதி ர்வு இருக்கும். அதற்குத் தக்கவாறு Amethyst சீர் பெற்று தன் வேலையை செய்யும். அதை மற்றவர் அணியும்போது அந்த அதிர்வுகள் மாறுபடுவ தினால் பலன் கிடைக்காது. Amethyst அணியும் முன் அதற்கான முறையில் சுத்தப்படுத்திய பின் னரே அணிய வேண்டும். சுத்தப்படுத்திய பின் அதன் அதிர்வுகள் சீர்பெறும். அவ்வாறு முழு மையாக சுத்தப்படுத்திய பின் தான் முழுபலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment