நவக்கிரகங்கள் அருளாசி புரியும் தலங்கள்
ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைப்பாடு, அவற்றின் தாக்கம் ஒருவரின்
வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில்
புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. நல என்றால் ஒன்பது என்றும், கிரகம் என்றால் கோள்
என்றும் பொருள்படும். நவகிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களைக் குறிக்கும்
தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்
60 கி.மீ. சுற்றளவில் உள்ளது.
1. சூரியன் – சூரியனார் கோவில்
இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனாரை தரிசித்தால் ஆரோக்கியம், வெற்றி,
வாழ்வில் செழுமை ஆகியவற்றைப் பெறலாம்.
2. சந்திரன் – திங்களூர் கோவில்
சந்திர கடவுளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சென்று வருவதால் நீண்ட ஆயுளும்
சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறுவர். சந்திரனால் துன்பங்களையும், துயர்களையும்
துடைக்க வல்லவர்.
3. செவ்வாய் – வைதீஸ்வரன் கோவில்
இந்தக் கடவுளை வணங்குபவருக்கு தைரியம், வெற்றி, பலம் ஆகியவற்றைப்
பெறலாம்.
4. புதன் – திருவெண்காடு
புதனின் அருள்பார்வையில் அறிவும், புத்தி சாதுர்யமும் கிட்டும்.
5. குரு – ஆலங்குடி
இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 12 ராசிகளுக்கு குரு பகவான்
இடப்பெயர்ச்சி அடையும்பொழுது இத்தலத்தில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
6. சுக்கிரன் – கஞ்சனூர்
சிவன் பார்வதி திருமணக் காட்சியை பிரம்மா இத்தலத்திலிருந்து கண்டார்.
கணவன்மார்கள் தங்கள் மனைவியரின் நல்வாழ்விற்காக இங்கு வந்து தரிசனம்
செய்யலாம்.
7. சனி – திருநள்ளாறு
12 ராசிகளுக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி செய்யும்போது சிறப்புப் பூசைகள்
நடைபெறும். இங்குள்ள நளதீர்த்தத்தில் குளிப்பதால் தீமைகள் விலகிவிடும் என்று
நம்பப்படுகிறது.
8. கேது – கீழ்பெரும்பள்ளம்
தேவர்கள் பாற்கடலை கடைய உதவியாக இருந்த வாசுகி நாகத்திற்கு ராகுவும், கேதுவும்
உதவினர்.
9. ராகு – திருநாகேஸ்வரம்
ஆதிசேஷன், தக்ஷ்ன், கார்கோடகன் எனும் சர்ப்பங்கள் (பாம்புகள்) சிவபெருமானை
வழிபட்ட தலம்.
No comments:
Post a Comment