அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது.\
இஸ்லாம் மதத்திலிருந்து, கிறித்தவம், ஜைனம், இந்து மதம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது.
அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.
அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை.\
அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.
No comments:
Post a Comment