இரண்டாம் திருமணம் செய்யும் போது ஜாதகம் பார்ப்பது அவசியமா?
பொதுவாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தாலும், 2வது திருமணம் செய்யும் போது மனப்பொருத்தம் மட்டுமல்லாது, ஜாதகப் பொருத்தத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
சில ஜாதகங்களுக்கு எத்தனை தாரம் வந்தாலும் தங்காத நிலை காணப்படும்.
பொதுவாக மறுமணம் என்றாலே கிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்களின் சதவீதம் குறையும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
2வது திருமணம் செய்யும் போது வரன்களின் தசா புக்தியை பார்ப்பது அவசியம். மேலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபருக்கு குழந்தை உள்ளதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் குழந்தையின் ராசிக்கும், வரக்கூடிய பெண்ணின் ராசிக்கும் முரண்பாடு/பகை இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு பொருத்தம் பார்த்து 2வது திருமணத்தை நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment