பெரியபாளையத்து அம்மன் கோயிலில் கர்க்கடக மாதம் என்று சொல்லப்படுவது ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் பெண்கள் பெருவாரியாகச் சென்று பெரியபாளையத்து அம்மனை வணங்குவார்கள்.
அப்பொழுது ஆடைகளைக் களைந்து வேம்பு இலை ஆடை அணிந்து வணங்குவார்கள். அவ்வாறு வேம்பு கொத்துகளை ஆடைகளாக அணிந்து வணங்கும் போது அவர்களுக்கு எல்லா விதமான பலன்களும் கிடைக்கும். இது ஐதீகம். இன்றைக்கும் பல பெண்கள் அதனை சிரத்தையுடன் செய்கிறார்கள்.
மருத்துவ ரீதியாக பார்க்கும் போது சரும நோய்கள், அலர்ஜி போன்றவை விலகுகிறது. ஏனென்றால் வேம்பு கிருமி நாசினியாகவும் வேம்பு விளங்குகிறது.
அம்பாளுக்கே தன்னை நேர்ந்து விடுதல். கோழி, ஆடு நேர்ந்து விடுவது போல், தன்னையே நேர்ந்துவிடுதல், அர்ப்பணித்தல். இதுதான் பெரியபாளையத்து அம்மனுடைய பெரிய சிறப்பம்சம். உயர் கல்வி படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட, இதுபோன்று வேம்பு இலை ஆடை தரித்து வணங்குவதால் நல்ல பலன் இருக்கிறது. அதன்பிறகு எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கிறது என்று சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment