|
செவ்வாய்கிழமையில் பிறந்ததால் செவ்வாய் தோசமா?
ஜாதக அமைப்பில் நிறைய தோஷம் இருக்கிறது. அது என்ன செய்யும் பாவம்
என்னக்கென்னணு அது பாட்டுக்கு சைலண்ட்டா இருக்கும்.
வாலிபம் நெருங்கும் போது, புள்ளையாண்டான் நினைப்பார், ஒரு கல்யாணம் காட்ச்சியை
செய்து, அடியேன்னு கூப்புடுறத்துக்கு ஒரு ஆளை ரெடிபன்னலாம்னு பார்த்தல், அப்பத்தான்
தோஷம் எல்லாம் வேஷத்தை கலைச்சுட்டு வெளியே வரும்.
பொண்ணுங்க கதையும் அதுதான். எந்த நாட்டு இளவரசன் வருவான்னு வழிமேல் விழி
வைத்து காத்திருந்தால், ஜோசியர் போடுவார் பாருங்க ஒரு குண்டை.
அடடா.... பொண்ணு ஜாதகத்திலே தோஷம் இருக்கே?
அவ்வளவுதான்.... காத்து போன பலுன் மாதிரி, மாத்து வழி தெரியாம மனசு உடைச்சு
போயிடும்.
ரொம்ப பேர் வாழ்க்கையல தோஷம் செய்யுற வேலையே இதுதான். கொஞ்சி குலாவுற
பொஞ்சாதிக்கு, நெஞ்சு பூரிக்கிற அளவுக்கு அட்டியலை வாங்கி போட்டு அசத்தலாம்னு
யோசிச்சுகிட்டு இருப்பார்.
ஆனால்... வாழ வந்த பொண்ணு வாயிலேயே தேளை வளர்க்கிறமாதிரி வார்த்தையாலேயே
கொட்டும்.
என்ன காரணம்?
தோஷம்தான்.
நீங்க அஞ்சு தலை நாகம் கேள்வி பட்டு இருப்பிங்க. பத்து தலை நாகம்
தெரியுமா?
தெரியாதா?
நாக தோஷம் உள்ள பொண்ணை பாருங்க. அடிகொரு தரம் சீரிகிட்டே இருக்கும்.
பொதுவா ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கும். மிருகம்னு சொல்றதே
கோவம்தான். ரொம்ப பேருக்கு அந்த மிருகம் சைலண்டா தூங்கிகிட்டே இருக்கும். அது
எப்போதாவது புரண்டு படுக்கும்.
அப்படி புரண்டு படுக்கிறதுதான், வேண்டாம், ஜாக்கிரதை, எனக்கு கெட்ட கோவம்
வரும், கடுப்பாய்டுவேன், இப்படி வார்த்தையா முழிச்சு பார்க்கும்.
நாக தோஷம் உள்ள பொண்ணுக்கு 2 , 8 , இல் ராகு கேது இருந்துட்டா, போச்சு ஆத்தா
புண்ணியவதி அலங்கார ரூபினி பார்த்தால் பச்சை மரம் கூட பத்தி எரியும்.
சரி இதுக்கு என்னதான் தீர்வு?
பரிகாரம்தான்.
பரிகாரம் செய்தால், தள்ளி போற திருமணத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம். ஆனால்
வாய்க்கு போட்டு போட முடியுமா?
முடியாது.
சரி... தோஷம் என்கிற வரிசையில் செவ்வாய் தோஷம், கால சர்ப்பதோஷம், சனி தோஷம்,
புனர்பூ தோஷம், நாக தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பிரதோஷம் சாரி...
பிரதோஷம் சிவபெருமானுக்கு உரியது என்பதால் மற்ற எல்லா தோஷமும் வந்து விடும்.
இந்த தோஷங்கள் என்ன செய்யும்?
சந்தோசம் கெடும். செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?
கணவன் மனைவிக்குள்ள இணக்கம் குறையும். மிஸ் அண்டர்சென்ட்டிங் இருந்து கொண்டே
இருக்கும். பாலும் தண்ணீரும் மாதிரி பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைய வேண்டிய
தம்பதிகள், காம்போடு பூவு கருத்து வேறுபாடு கொண்ட மாதிரி,
ஒரே......................... உர்.....தான்.
காலசர்ப்பதோசம் என்ன செய்யும்?
முன்னேற்ற தடை வரும். முயற்சிகளில் தோல்வி வரும், எதுவும் செய்ய முடியாத நிலை
வரும்.
சனி தோஷம் என்ன செய்யும்?
பத்து நிமிசத்து வேலையை, பாத்து தரம் மெனக்கட்டு, பத்து நாள் அலைந்து அதுக்கு
அப்பறம் முடியும். நீங்க என்னவோ கால நேரத்தை வெல்ல பஸ்சுலதான் போவீங்க. ஆனா உங்க
கால நேரம் உங்களுக்கு முன்னால இன்சின்ல உக்கார்ந்து இருக்கும்.
புனர்பூ தோஷம் என்ன செய்யும்?
பிறக்கும்போது, மிடில் கிளாஸ் பேமலில் பிறக்க வைக்கும். திருமண தடை வரும்.
வாலிபம் கடந்துதான் கல்யாணம் நடக்கும். ஒரு நேரம் கையில் காசு இருக்கும், ஒரு
நேரம் என்ன செய்யுறதுன்னே தெரியாது.
நாக தோஷம் என்ன செய்யும்?
என்ன கருத்து வேறுபாடுதான்.
புத்திர தோஷம்?
தெரிந்த கதைதான்.
சரி... இந்த வரிசையில் சந்தைக்கு வந்திருக்கும் புது சரக்கு செவ்வாய்கிழமையில்
பிறந்ததால் செவ்வாய் தோஷம் என்பதுதான்.
இதுக்கு ஜோதிட ஆதாரம் ஏதும் இருக்கானா... இல்லை. சில புது கரடி பேர்வழிகள்
வாய்க்கு வந்தது எல்லாம் சொல்றாங்க. செவ்வாய்கிழமை என்பது ஒரு கிழமை.
பிறக்கிற மனிதன் எல்லாம் இந்த ஏழு நாளில் ஒரு நாளில் பிறந்துதான் ஆகணும்.
அப்படி பிறக்கிற நாள் செவ்வாய்கிழமையா இருந்தால் ஒன்னும் குடி முழ்கி
போய்விடாது.
யாராவது செவ்வாய்கிழமையில் பிறந்தால் செவ்வாய் தோஷம்மு சொன்னால், ஒரே
நகைச்சுவைதான் போங்கள்ன்னு ஒரு சிரிப்பை சிரிச்சுட்டு வாங்க சரியா?
No comments:
Post a Comment