Tuesday, 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 292


பாக்கியன் திசையை நீகேளு--மாதே
பாக்கியன் லாபத்தில் கேந்திரமேற
யோக்கியம் பாக்கியமுண்டு--நல்ல
போக்கியம் ஆண்மையும் கூடவே சொல்லு
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இனி, ஒன்பதிற்குடைய பாக்கியாதிபன் திசையைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக இப்பாக்கியாதிபன் 1,4,7,10 ஆகிய கேந்திரங்களிலும் 11-ஆம் இடமாகிய லாபஸ்தானத்திலும் தேறி நிற்க நல்லவிதமாக அனைத்துப் பாக்கியங்களும் நேரும். போக போக்கியத்தை ஆளுமையுடன் இச்சாதகன் அனுபவிப்பான் என்று குறிப்பிட்டு கூறுவாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment