Tuesday, 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 286




மூன்றவன் திசை நீகேளு --மாதே
மூணேழில் மும்மூன் றிலக்கினமேற
நாணயவீரியமுண்டு நல்ல
போகமும் சேவகம் கலந்து சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இனி மூன்றுக்குடையவன் திசையைப் பற்றிச் சொல்வேன். அதனையும் நன்கு கேட்பாயாக! இம்மூன்றுக்குடையவன்3, 7, 9 ஆகிய இடங்களில் அமர்ந்தானேயென்றால் சொல் தவறாத நாணயமும் நல்வீரமும் உண்டாம். அதோடு பொறுப்பான சேவகத்தால் பெரும்போக பாக்கியம் அடைவான் என்பதையும் கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment