Monday, 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 280


பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பாங்கான மலை தனிலை சப்தகோள்கள்
சீரப்பா ஜென்மனிடம் பெரியக்காள்தான்
சிறப்பாக வீற்றிருப்பாள் கிரகம் தன்னில்
கூறப்பா குண்டித் துணி கந்தையாகும்
குவலயத்தி லிவனைப்போல் சொன்னாரில்லை
ஆரப்பா யென்னைப்போல் சொன்னாருண்டோ
அப்பனே யின்னமொரு புதுமைகேளு


மேலும் நான் கூறப்போகும் மற்றொரு புதுமையையும் நீ நன்கு கேட்பாயாக1 1,4,7,10 என்ற கேந்திரங்களில் 7 கிரகங்கள் இருப்பின், அச்சாதகனுக்கு ஸ்ரீதேவியின் மூத்தோளான மூதேவிதான் தானே விரும்பி உவந்து அவனது மனையில் வீற்றிருப்பாள். அவனுக்கு உடுக்கும் உடையும் அமையாது. அமைந்தாலும் அது கந்தைக் துணியேயாகும். உலகில் இவனைப் போல் யாரும் இவ்வளவு வெளிப்படையாக உண்மைச் சொன்னவரில்லை. போகமா முனிவரின் பேரருள் கொண்ட என்னைப் போல் சொன்னவர்கள் யாரேனும் உண்டோ? (இல்லவே இல்லை என்பது கருத்து) எனவே போகர் அருளால் புலிப்பாணி மேலும் ஒரு கருத்தினைக் கூறுவேன்,கேட்பாயாக!

No comments:

Post a Comment