Wednesday, 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 176


பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர்புதனுங் குருசனியும் வாதநாடி
சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்
சிறப்பான பாம்புகளும் பித்தநாடி
நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும்
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருடன் கடாட்சத்தாலே
விவரமெலாம் புலிபாணி விளம்பக்கேளூ


என் நம்பிக்கைக்கு உரியவனே! உனக்கு இன்னமொரு விவரத்தையும் விளங்கச் சொல்வேன். கேட்பாயசக!

குரு எல்லாரும் போற்றுகின்ற புதனுக்கும், சனிபகவானுக்கும் வாத நாடி, சீர் பெற்ற ஆனால் துர்க்கிரகம் என ச் செப்பப்படுகிற சூரியனுக்கும் செவ்வாய்க்கும் சிறப்புமிக்க பாம்புகளுக்கும் பிதநாடி. மற்றும் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் நேர்ந்தது நேர்மையுள்ள சிலேத்த்ம நாடி, என்றும் வீரமிக்கவனே போகமா முனிவரது பேரருளால் புலிப்பாணி சொன்னேன்.

No comments:

Post a Comment