Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 160


காணப்பா கதிரவனும் மதியுங்கூடி
கனமுள்ள லெக்கினத்தை கண்னால் நோக்க
சீனப்பா சக்கிலியப்பெண்ணை ஜென்மன்
சிறப்பாகச் சேர்ந்தணைவன் ஜெகத்திலேதான்
ஊணப்பா உதையவனும் கண்ணுற்றாலும்
உத்தமனே உலகத்தில் ஒருவர்பாரார்
வீணப்பா போகருட கடாட்சத்தாலே
விதமாகப் புலிபாணி விளம்பினேனே.


வேறொரு விஷயத்தையும் நீ நோக்குக. சூரியனும் சந்திரனும் கூடி நின்று பெருமைமிக்க இலக்கினத்தைக் கண்ணால் நோக்க அச்சாதகன் சக்கிலியப் பெண்ணைச் சிறப்பாகச் சேர்ந்து சுகித்து இப்பூமியில் வாழ்வான். ஆனால் சூரியன் மட்டும் பார்ப்பின் உத்தம குணம் உள்ளவனே. அவனை ஒருவர்கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்பதனையும் போகரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment