Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 152


ஆச்சப்பா யின்னமொரு சேதிகேளு
அஞ்சுள்ளோன் தீயனாய் அரவைக்கூடி
கூச்சப்பா நாடியே மூன்றில் நிற்க
குமரனுட மனைவி யெண்ணங் கருத்தைக் கேளு
பாச்சப்பா புருஷனிடம் சண்டையிட்டு
பதறிவிழுந் தோடிடுவள் கொடியநீலி
யேச்சப்பா வெகுபேர்க்கு யிவள் மேல்மோகம்
யிவளாலே கெட்டவர்கள் அநேகம்பேரே.


வேறொரு சேதியினையும் உனக்கு விளக்கிக் கூறுவேன். இதனையும் கேட்பாயாக! இலக்கினத்திற்கு 5-க்குடையவன் தீயனாய்ப் பாம்பைக்கூடி மூன்றாம் இடத்தில் நிற்க அக்குமரனுடைய மனைவியின் எண்ணத்தையும் கருத்தையும் அறிந்து கொள்க. சதாகாலமும் புருஷனிடம் சண்டையிட்டு பதறி விழுந்தோடிடுவாள். குணத்தில் அவள் கொடிய நீலியேயாவாள். இவள் காமவிருப்பினளாதலால் இவள் மேல் பலர் மோகம் கொள்வர். இவளாலே கெட்டழிந்தவர்களும் பல பேர் ஆவர் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment