பெயர் எண்: 5
பெயர் எண் பலன்கள்:
14. இந்த எண்ணையுடைய பெயர் வியாபாரத்திற்கு ஏற்றது. எப்போதும் இவர்கள் ஜனக்கூட்டத்தாலும், பலவிதச் சாமான்களாலும் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். எல்லாவித வியாபாரங்களும் வெற்றி பெறும். தினமும் பலரைச் சந்திக்க வேண்டியதிருக்கும். எப்போதும் பயணம் ஏற்படும். பிறரை நம்புவதால் கஷ்டங்களும், ஏமாற்றங்களும் ஏற்படும். இடி, மின்னல், வெள்ளம், நெருப்பு ஆகியவற்றால் ஆபத்துகள் ஏற்படலாம். வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இல்லையெனில் கீழே விழ நேரும். வியாபார சாமான்களும் 14 எண் வருகிற பெயரை உடையனவாக இருந்தால் அவை நல்ல வியாபாரம் ஆகும். காதல், திருமணம் போன்ற விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் ஏமாற்றம் ஏற்படுவது நிச்சயம்.
No comments:
Post a Comment