கத்தி கையில் வைத்திருந்தால்
ஒரு கை பார்த்து விடுவேன்
நீ கண்ணில் அல்லவா வைத்திருக்கிறாய்
காதலை சொல்லவரும்போதேல்லாம்
உன் கண்ணின் கூர்மையால்
என் இதயத்தை காயமுறசெய்கிறாய்
கத்திக்கு உறை இருப்பதுபோல்
உன் கண்களுக்கு
கண் மை
ஈட்டி எறிவது
ஒருவகை விளையாட்டு
நீ கண்ணால் எறிகிறாயே
அது எந்த வகை ?..
நுழைய அனுமதியில்லாத பகுதிகளுக்கு
பாதுகாப்பு பலமாய் இருக்கும்
உன் இதயமுமா அனுமதி மறுக்கப்பட்ட இடம்
கண்கள் கத்தி வைத்து
காவல் காக்கிறதே
ஏழு மலை
ஏழு கடல் தாண்டி அசுரனின் உயிர்
பாதுகாப்பாய் இருக்குமாம்
என் காதலுக்கு உன் இதயம் தான் சரி
உன் கண்களை தாண்டி
என் காதலை யாரென்ன செய்துவிட முடியும் ?..
என் காதலை
கனவிலாவது பத்திரபடுத்திகொள்
உன் கண்களை தாண்டி வர அப்போதாவது
முடிகிறதா என்று பார்க்கலாம்
No comments:
Post a Comment