என்றாவது ஒரு காதலி கிடைப்பாள
என்று பல வருடங்கள்
காத்திருந்த காலங்கள் உண்டு
விதவிதமாய் பெண்கள்
எனது வாழ்க்கை பக்கங்களை
நிரப்பி போய்இருக்கிறார்கள்
சிலர் தோழியாக வெகு
சிலர் தொல்லைகளாக
பலர் அழகால்
சிலர் அறிவால் மயக்கியதுண்டு
ஆனாலும் காதலி என்று
யாரும்இருந்ததில்லை அதுவரை ………
இனி காதலி என்றாலே
அவள் ஒருத்தி என்று நம்பியது
இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம் என்பது
எதிர்காலமாக இருக்கலாம்
நிகழ்காலத்தில் வெறுமை
ஒவ்வொரு திருமணத்திலும்
எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை
இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை
அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்
எல்லா காதல்களும்
இரட்டை வாழ்க்கை வாழ்கிறது
மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது
கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி
ஒரு காதல் ஒருபோதும் இல்லை
ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்
விரும்பியோ விரும்பாமலோ
அரும்பிவிடுகிறது
இனி என் அடுத்த காதலுக்கு நிச்சியம்
காத்திருக்கலாம்
காதல் ஒருபோதும் முடிவதில்லை
No comments:
Post a Comment