Saturday, 30 June 2012

உன் முத்தங்கள்



Quantcast
 
உன் சின்ன சின்ன கோபங்களின்
உடைந்து போகிறது எனது இதயம்
பின் உன் முத்தங்கள் ஒட்டவைக்க……..

உன்னை பார்க்கவேண்டும் எனும்போதெல்லாம்
விரலில் ஊசியால் குத்திகொள்வேன்
சட்டென எட்டி பார்த்து விடுவாய் வெட்கத்தால் சிவந்து
எனது உதிரமே நீதானே……

நான் உனக்கு முத்தமிடும் போதும்
நீ எனக்கு முத்தமிடும் போதும்
காற்றின் மாசு குறைகிறதாம்
நம் முத்த சத்தத்தால் ….
முத்தத்தால் இதுவும் ஒரு பயன் பார்த்தாயா

அணைக்காமல் முத்தம் கொடுகிறானே என்ற தவிப்பு உனக்கு …
உன் ஆடை கசங்கி விடுமோ தயக்கமேனக்கு
எப்படி தெரியும் என்று பார்கிறாய கொடியில் காய்ந்த உன் ஆடைகள் தான் கூறியது ……

உன் காதலியை எனக்கு காட்டவே மாட்டாயா
என்று என் வீட்டு ஆளுயர நிலைக்கண்ணாடி கேட்டுகொண்டே இருக்கிறது ….
முடியாது என்று சொல்லி விட்டேன்
நான் முத்தமிடும் போதெல்லாம் வெட்க படுவாய்
அது நம் முத்தத்தையும் உன் வெட்கத்தையும் நம் முத்தத்தை பார்க்கும் பின்
நீ யாரோ பார்க்கிறார்கள் என்று விலகி விடுவாயோ


எனக்கு குளிரெடுக்கும்
உனக்கு வேர்க்கும் நாம் முத்தமிட்டுக்கொண்டே
அனைத்து கொள்ளும்போதெல்லாம் ….. இது தான் சவ்வூடு பரலாகஇருக்குமோ

உன் உதடுகளை கவ்வி பிடிக்கும் போதெலாம்
என்னை மூச்சுமுட்ட கட்டிபிடிப்பாய் …. இது நீயுட்டனின் மூன்றாம் விதி

பொதுவாக முத்தங்கள் யாருக்கு எப்படியோ ….
எனக்கு உன் முத்தங்கள் தான் பிராணவாயு
இருந்தும் குறைவாகத்தான் கிடைக்கிறது

No comments:

Post a Comment