கனவு கண்டுகொண்டிருந்தேன், பகலில்
விழி மட்டும் திறந்திருந்தது
மனத்திரையில் அவள்...
தேவதை வெள்ளை நிற ஆடையில் அல்லவா வரும்
ஆனால் என் தேவதை மட்டும்
சிவப்பு நிற சுடிதாரில் இருந்தது
வந்த தேவதையோ
கைநீட்டி எனை அழைத்துக்கொண்டு சென்றது
நானும் சென்றேன் கூடவே எதிர்ப்பின்றி
அழைத்து செல்வது தேவதை அல்லவா!
எங்கே சென்றோம்
ஏன் சென்றோம் தெரியவில்லை
தேவதையின் கரம் பற்றிக்கொண்டு
மிதந்தேன் வானில்
ஆஹா என்ன இன்பம்
இப்படியே இறந்துவிடலாமா? என யோசித்தேன்
அப்போது தான் புரிந்தது
நான் பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது
பின்னந்தலையில் நல்ல அடி
"வேலயப்பாரடா" மேலதிகாரி
பின்னாலிருந்து "கொள்" என சகபாடிகள் சிரிப்பு......................
No comments:
Post a Comment