Friday, 29 June 2012

குழந்தை




இந்த
நடக்கும் பொம்மைக்கு
பிடித்தது
நடக்காத பொம்மைகளை...

ஆசை உண்டு
பேராசை இல்லை.
இது
ஓர்
சுவாரசியமான நாவல்!

இது
அனைவருக்கும் பிடித்த
புன்னகைப் புஷ்பம்!

இந்த
பொன் விளக்கு
சிரிக்கும் வீட்டில்
மின் விளக்கு தேவையா...?

நிஜமான அழுகைக்கும்
நிஜமான சிரிப்பிற்கும்
குழந்தையை தவிர
இன்னொரு உதாரணம்
குழந்தையே...

ஒரே சமயத்தில்
பணம் நீட்டுங்கள்
தட்டிவிடும்...
பலூன் நீட்டுங்கள்
தட்டிப் பறிக்கும்.

பிடித்ததோடு
பிடிவாதம் செய்யும்...
வாதம் செய்யாது

இனிப்புத் துண்டுக்கும்
நெருப்புத் துண்டுக்கும்
பேதம் தெரியாது

அழத் தெரியும்
அழ வைக்கத் தெரியாது.

விழத் தெரியும்
யாரையும்
விழவைக்க தெரியாது.

சிரிக்கத் தெரியும்
சிரிக்க வைக்க தெரியும்
யாரையும்
சிரிப்பாய் சிரிக்க வைக்கத்
தெரியாது.

No comments:

Post a Comment