Saturday, 30 June 2012

உதட்டு முத்தம்



வைகறை விடிந்தால் அச்சம் பிறக்கிறது
கனவில் வந்த நீ காணமல் போய்விடுகிறாய்
கனவில் மட்டும் வருகிறாய் நேரில் வருவதில்லை என்ற
குறை இருந்தாலும் இமை மூடினால்
காணமல் போய்விடுகிறது எப்போதும்

முத்தகரைகளை பத்திர படுத்தலாம் என்றால்
கனவு முத்தம்
உன்னை போலவே விழித்ததும் காணமல் போய்விடுகிறது

கருப்பு வெள்ளை கனவுகள் தான் வருமாம்
நீ வரும் கனவு மட்டும் எப்படி வண்ணத்தில் ?..
இரவு என்பதற்காக பஞ்சவர்ண கிளி கருப்பாய் இருக்காதே என்கிறாய
அதுவும் சரிதான்

பற்றாகுறை பட்ஜெட் போடும் அரசுகளை போலத்தான்
நீயும் உன் கனவுகளும்
பத்துவதே இல்லை

கனவில் நீ தரும் முத்தங்களை
எல்லாம் வரிபிடித்தம் செய்கிறது பகல்
நேரில் வரி விலக்கு போட்டுவிடு

கனவு முத்தம் பற்று
பகல் முத்தம் வரவு
உதட்டு முத்தம் லாபம்

எல்லா கனவுகளிலும் நீயே முத்தமிடுகிறாய்
நான் தர ஆயத்தமாகும் போது விடிந்து விடுகிறது
நீ மறைந்து விடுகிறாய்

என் கனவுக்குள் நீ முத்தமிடுவது போல
உன் கனவில் நான் முத்தமிடுகிறேனா ?..
எங்கே நீ வாங்க மட்டும் தான் செய்கிறாய் தருவதே இல்லை என்கிறாய ?..
என்ன செய்ய கொடுப்பதை விட பெறுவது தான் சுகம் காதலில்

கனவு முத்தம் சத்தாய் தருகிறாய்
பகல் முழுவதும் அலைந்து திரிந்த களைப்பு காணமல் போய்விட

எல்லா இரவுகளும் நான் கனவு காண தாயராகிறேன்
நீ முத்தம் கொடுக்க தயராகிறாய்
எல்லா கனவுகளிலும்

நீ ஒருத்திமட்டும் தான் ….ஆனால் எனக்கு
ஒவ்வொரு கனவிலும் ஒவ்வொருத்தி

No comments:

Post a Comment