Wednesday, 27 June 2012

அவள் சந்திப்பு....

அவள் சந்திப்பு.... 

ஓராயிரம் முறை
உன்னைப் பார்த்த போதும்...
ஒரு நொடி நிற்குமடி என் இதயம்,
உன் உதயத்தின் போது....

மூச்சுக் காற்று பற்றவில்லையடி,
மங்கை, உன் முகம் நேராய் நோக்கும் போது....
மூலை சற்று முடங்கியதடி,
விழிகள் நான்கும் பேசும் பொழுது....

தேகம் ஓடும் உதிரமெல்லாம்,
உறைந்ததென்ன மாயம்....
உதிரம் செல்லும் வழியெங்கும்,
வியர்வை ஓட வைத்தாய் நீயும்....

பேசியிருந்தேன் ஒத்திகையை,
ஓர் அட்டவணையைக் கொண்டு....
வளி வாசிகுதடி, இதழைத் திறந்தால்,
உன் முகத்தைக் கண்டு....

எச்சில் விழுங்கத் தவிக்கின்றேன்,
இச்சை கொண்டவள்,
நீ..அருகினில் இருப்பதனால்....

அச்சம் கொண்டேனடி இங்கு,
உன்னுடன் உரை ஆரம்பம் அமைய....
துட்சமாய் மதித்தேனடி,
நம்மைச் சுற்றி நடந்தேறும் நிகழ்வுகளையெல்லாம்....

இதயத் துடிப்பு எகிறியதடி....
இன்ன பிற சத்தங்கள் ஒலித்தும்,
துடிப்பின் ஒலி,
செவியைப் பிழந்ததடி....

இதழ் திறந்து மொழிந்தேன்,
முதல் வார்த்தையை, பல இன்னல்களின் பிறகு....
அதில் தொடங்கியது உரை,
இன்னும் முடியவில்லை, பல நாழிகை கழித்தும்....!!!!

No comments:

Post a Comment