Monday 3 September 2012

கிரஹங்களின் வண்ணத்தில் ஜாதகன் இருப்பான்

லக்கின நவாம்ச நாதன்
தன்னிறம் தனையும் அப்பால்
தக்கசசந் திரலக் னத்தான்
தன் நவாங் கிசாதி தானும்
உக்கிர மாகப் பார்த்த
உயர்கிர கத்தா லும்தன்
ஒக்கவே நிறத்தைச் சொல்ல
வேண்டுமென் றுரைத்தார் மானே!


 

இலக்கினாதிபதி, நவாம்ச லக்கினாதிபதி ஆகிய கிரஹங்களின் வண்ணங்கள் என்னவென்று பார்த்தும், அதே போல, சந்திர லக்கினாதிபதி , நவாம்சத்தில் சந்திர லக்கின அதிபதி ஆகிய கிரஹங்களின் வண்ணங்கள் என்னவென்று கண்டறிந்து , இலக்கினத்தையும், சந்திர லக்கினத்தையும் பார்த்த கிரஹங்களின் வண்ணங்களை அறிந்தும், இவர்களில் பலமான் கிரஹங்களின் வண்ணத்தில் ஜாதகன் இருப்பான் என்று சொல்லவேண்டும்!

சந்திர லக்கினம் - சந்திரன் நின்ற ராசி ( ஜென்ம ராசி)

கிரஹங்களின் நிறங்கள்:-

சூரியன் - சிவப்பு ;
சந்திரன் - வெண்மை ;
செவ்வாய் - சிவப்பு ;
புதன் - பசுமை ;
குரு - மஞ்சள் ;
சுக்கிரன் - வெண்மை ;
சனி - கருமை ;
ராகு - சாம்பல் நிறம் ;
கேது - பல வண்ணக் கலவை.

இலக்கினத்தைப் பார்த்து , இலக்கினத்தில் இருந்த கிரஹங்கள் மட்டுமல்லாமல் , இலக்கினத்திற்கு அருகில் அமர்ந்த கிரகங்களும் கூட ( அதாவது 2 & 12 ஆம் இடத்தில் அமர்ந்த கிரஹங்களும் கூட) ஜாதகனின் நிறத்தை நிர்ணயிப்பதில், குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன.

பொதுவாக, நாம் மனிதர்களின் நிறத்தைச் சிவப்பு, கறுப்பு, மா நிறம் என்று மூவகையாகத் தான் கூறுகிறோம்!

சிவப்பு நிறத்திலேயே பல்வேறு வகைகள் இருப்பதை காண முடியும் - மஞ்சள் கலந்த சிவப்பு, வெண்மை கலந்த சிவப்பு, பச்சை கலந்த சிவப்பு, வெண்மையில் செம்மை, செம்மையில் வெண்மை என்று பல்வேறு நிற பாகுபாடு அறிவோம். இவ்வாறே ஒவ்வொரு நிறத்திற்கும் கூறலாம்!

பொதுவாக, சுக்கிர ஆதிக்கமும் , புதன் ஆதிக்கமும் கொண்டவர்கள் நிறப் பொலிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.

நிற நிர்ணயத்தில், கால தேச அனுமானங்களைக் கொண்டும் மனதில் நிறத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேசத்தில், அனைவரும் கிட்டத்தட்ட ஒரு குறிப்பிட்ட நிறத்தில் தான் இருப்பார்கள். அந்த ஒரே நிறத்தின் பொலிவு சற்றுக் கூடுவதும், குறைவதுமாக ஆளாளுக்கு மாறுபடுமே தவிர நிறம் வேறுபடாது.

உதாரணம் - இங்கிலாந்து மக்கள் - அனைவரும் வெள்ளை நிறத்தவர் - அவர்களில் ஒருவர் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர் - சனியின் நிறம் கருப்பு - அதனால் அவர் கருப்பாக இருப்பார் என்று அர்த்தமல்ல் - அவருடைய வெண்மையில் கவர்ச்சி இருக்காது - பொலிவு இருக்காது - ஒருவித ஈர்ப்புத் தன்மை இருக்காது. எனவே, ஜோதிட விதிகளை கால தேச வர்த்தமானங்களை அனுசரித்து நாம் புத்தி யுத்திகளின்படி பொறுத்திப் பார்த்து பலன் உரைக்க வேண்டும்!

No comments:

Post a Comment