Monday 3 September 2012

நாக பிரதிஷ்டை செய்ய

படமுடன் இராகு கேது
பரிவுடன் அஞ்சில் மேவ
திடமுடன் பார்க்க அஞ்சோன்
திடமதை இழந்து நிற்க
அடவுடன் பொன்னன் தானும்
அழிவுற்றுக் கெட்டுப் போனால்
இடவுடன் சர்ப்ப தோடம்
எழுந்திடும் பிள்ளை சாவாம்!

இராகு கேது ஐந்தாம் இடத்தில் நின்றிருக்க , அல்லது ஐந்தாம் இடத்தைப் பார்த்திருக்க , ஐந்துக்குடையவன் பலவீனப்பட்டுப் போய்விட , குரு பகவானும் வலுவிழந்து நின்றிருந்தால் அந்த ஜாதகனுடைய குழந்தை நாக தோஷத்தால் இறந்து போகும்.


நாக தோஷத்தைப் போக்கிட , நாக பிரதிஷ்டை செய்ய வேண்டும்!


நாக பிரதிஷ்டை செய்வது எப்படி?


அகலமான கருங்கல் பாறையொன்றில் பாம்புகள் இரண்டு பின்னிக்கொண்டு இருப்பது போன்ற உருவத்தை சிற்பியை செய்யச் சொல்ல வேண்டும்.


பாம்புகளின் தலை ஒன்றோ ஐந்தோ கொண்டவையாக வடிவமைக்க சொல்ல வேண்டும்.


இந்த நாக சிற்பத்தை இருபத்தேழு நாட்களுக்கு மேல், சுத்தமான தண்ணீரில் இருக்குமாறு வைக்க வேண்டும். தோஷம் உள்ளவனுக்கு ஏற்ற நாளில் நல்ல நாளில் தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். அந்த நாள் தாரா பலமும் சந்திர பலமும் உள்ள நாளாக இருக்க வேண்டும்.


அந்த நாளில், எட்டாமிடம் சுத்தமாக இருக்கின்ற இலக்கினம் நடைபெறும் நேரத்தை நாக சிற்பத்தை பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்ற நாளாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


அந்த நாளில் , அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றிணைந்து இருக்குமிடத்தில்
நல்லொழுக்கமுள்ள , தெய்வ நம்பிக்கை உடையவர்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.


அரச மர வேப்ப மரங்களின் அடியில் பீடம் எழுப்பி , அதன் மீது பிரதிஷ்டை செய்வது சிறப்பு.


நாக பிரதிஷ்டை செய்த பின் , நாக பிரதிஷ்டை செய்பவர் , மஞ்சள் அந்த சிலையின் மீது தங்கள் கைகளைக் கொண்டு மஞ்சள் கொட்ட வேண்டும். குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். மல்லிகைப் பூ / மஞ்சள் சாமந்திப் பூ சார்த்திடுதல் வேண்டும்.


முதல் வரிசையில் நான்கு நெய் அகல் தீபமும், இரண்டாம் வரிசையில் ஏழு நெய் அகல் தீபமும் ஏற்றிய ஒரு நெய் அகல்விளக்கைக் கொண்டு இருவரிசை நெய் அகல் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஏற்றிய நெய் அகல் விளக்கை நான்கு விளக்கின் முன்பாக வைத்திடல் வேண்டும்.


ஐந்து அகர்பத்திகள் ஏற்றி வைக்க வேண்டும். ஆறு மஞ்சள் வாழைப்பழம் வைக்க வேண்டும். வெற்றிலைப் பாக்கு வைத்தல் கூடாது. வாழைப் பழத்தில் ஊது வத்திகளை ஏற்றி வைக்கக் கூடாது. அதன் பின், கற்பூரம் ஏற்றி வைத்து மனமுருகி வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment