Tuesday, 14 August 2012

இரத்தின களஞ்சியம் பவளம்

இரத்தின களஞ்சியம்
பவளம்
பவளத்தை தெரியாத மனிதர்களே இல்லை. அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை பவளம் அனைவரின் வீட்டிலும் இருக்கும். பவளம் Whilse Coral என சொல்லப்படும். வெள்ளைப் பவளமும் உண்டு. அதே போல சிகப்பு, இளம் சிகப்பு, வெள்ளையும் சிவப்பும் கலந்த பலவகை பவளத்தை உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இரத்னிங்களிலேயே மருத்துவ குணம் கொண்டுள்ள இரத்தினம் பேசப்பட்டாலும் பவளமும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. பவளத்தில் மஞ்சள் நிற காஸ்மிக் கதிர்களை வெளிவிடும். அக்கதிர்கள் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. என்னடா! சிவப்பு பவளத்திலிருந்து மஞ்சள் நிற காஸ்மிக் கதிர்கள் என்று நீங்களே பார்க்கலாம். முப்பட்டை கண்ணாடிக்குள் ஒரு Oringinal பவளத்தை வைத்து பார்க்கும்போது மஞ்சள் நிற கதிர்கள் வெளிவருவதை நீங்கள் பார்க்கலாம்.

பவளம் செவ்வாய் கிரகத்திற்கு உரியது. இந்த பவளத்தின் கடினத்தன்மை மூன்று. ஒளிவிலகல் 1.49 - 1.66 ஒப்படத்தி 2.68. எந்த வடிவத்திலும் பவளத்தை அணிந்து பலன் பெறலாம். பவளத்தில் விநாயகர் போன்ற பல உருவங்கள் அதனுடைய கடினத்தன்மை குறைவினால் அழகாக செதுக்கலாம். மிகவும் அழகாக பலன் தரும் பவளம் ஜப்பான் பவளம. அதேபோன்று பவளத்தின் பின்புறம் அதனுடைய வேர்கள் இருக்கும். பவளம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஜாதக ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ பவளம் அணிபவர்கள் வேறுடன் கூடிய பவளத்தையே அணிய வேண்டும். பவளத்தை அணியும்பொழுது தனக்குள் இருக்கும் கோழைத்தனம் மறையும். எதையும் தாங்கும் சக்தி பிறக்கும். தொடர்ந்து ஒரு காரியத்திற்கு போராடும்போது வெற்றி நிச்சயமில்லையா, இங்கு தொடர்ந்து என்ற வார்த்தைக்கு பவளத்தை அணியும்போது பலன் கிடைக்கும்.

விடாமுயற்சிக்கு பவளம் என்றுமே கூறலாம். அக்காலத்திலேயே அதாவது ராஜராஜச்சோழன் காலத்திலேயே அனைத்து நகை வியாபாரிகளும் பவள மோதிரத்தின் குண நலன்களை அவரால் அணியப்பெற்று அனைத்துப் பெண்களும் கண்டிப்பாக பவள அணிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக வரலாற்று நூல்களில் உள்ளதை நாம் காணலாம். அக்காலத்தில் இருந்து தான் அனைத்து கொல்லர்கள் பின்பு நகை கடைகள் போன்ற அனைத்து இடங்களிலுமே இன்றுவரை பவள மோதிரங்கள் விற்பதை நாம் காணலாம்.

பவளம் எந்த ராசி, நட்சத்திரம், லக்னம், திசை, புத்தி, கோச்சாரம் எதுவாயினும் பவளம் அணியலாம். மேலும் எந்த உலோகத்தில் வேண்டுமானாலும் அணியலாம். மேலும் மாங்கல்ய பலம் கொடுக்கக் கூடிய ஒரே இரத்தினம் பவளமே ஆகும். அதை தாலிப்பவளம் என்று கூறுவோம். அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தாலிப்பவளம் இரண்டாகத்தான் அணிய வேண்டும். ஒரு பெண் மகள் தன் திருமணத்திற்கு பிறகு பல விஷயத்தில் தன்னை மாற்றிக் கொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தன் தாய் வீட்டிற்கும், மாமியார் வீட்டிற்கும் வேறுபாடுகள் எந்த குடும்பத்திலும் உண்டு. (உணவு முறையிலிருந்து) அதை அனைத்தையும் ஒரு பெண்மகள் தான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பல விஷயங்களில் உடனே சீர் பெற இப்பவளம் மிகவும் உதவியாக இருக்கின்றது.

ஒரு குழந்தை பிறந்த உடன் Oringinal பளவத்தை அந்தக் குழந்தையின் உதட்டில், தினமும் குளிப்பாட்டிய பிறகு பலமுறை தடவிக்கொண்டே வரும்பொழுது உதடுகள் நல்ல கலர் பெறுவதுடன், Shining கிடைப்பதை கண்ணால் பார்க்க முடியும். பவளம் கரையும் தன்மை உடையது. நீங்கள் அணியும் சைசுக்கு ஏற்ப உங்கள் உடல் உஷ்ணத்திற்கு ஏற்ப பவளம் கரையும்பொழுது அதை மாற்ற வேண்டும்.

செவ்வாய் ஜாதகத்தில் வலு குறைந்தோ அல்லது சீரான வலுவை கொடுக்க இயலாத தருவாயில் இருக்கும்பொழுதோ, வயிறு சம்பந்தமாக அடிக்கடி கோளாறு இருப்பவர்களோ, எதிர்ப்பு சக்தி குறைந்த ஜாதகரோ, தொடர்ந்து ஒரு வேலை செய்ய தடுமாறுபவர்களாகவோ, அடிக்கடி தோல் சம்பந்தமான உபாதைகளை அனுபவிப்பவர்களாகவோ, அஜீரணக்கோளாறு உடையவர்களாகவோ, நரம்பு சம்பந்தமான தளர்ச்சி ஏற்படுபவர்கள் இப்பவளத்தை தேவைப்படும் கேரட்டில் தன் ஜாதக ரீதியாக ஆராய்ந்து தனக்கு தேவைப்படும் உலோகத்தில் உரிய முறையில் பதிக்கப்பட்டு Cleansing செய்த பிறகு செவ்வாய் கிழமையில், செவ்வாய் ஹோரையில் ஆரம்பிக்கும்பொழுது கண்கூடா பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment