பெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்
எந்தவொரு பெண்ணுமே தனக்கு அமையக்கூடிய 
மணவாழ்க்கையானது சீரும், சிறப்போடும், கணவனின் அன்போடும் மகிழ்ச்சியாக அமைவதைத்தான் 
விரும்புவாள். 
பெண்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், 
சுக்கிரன், செவ்வாயும் கிரகச் சேர்க்கையின்றி சுபர்பார்வையுடன் பலமாக அமையப் 
பெற்றால், மணவாழ்க்கையானது சிறப்பாக இருக்கும். ஆகவே 7ம் அதிபதி பலஹீனமாக 
இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகச் சேர்க்கை இருந்தாலும், மண வாழ்வில் 
பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 
கூட்டுத்தொழில் யோகம்
பல கணவன்மார்கள் தங்களுடைய மனைவியை கூட்டாக 
சேர்த்து தொழில் செய்து முன்னேற்றமடைகிறார்கள். அப்படி கூட்டுத் தொழில் செய்வதற்கு 
மனைவியின் ஜாதகமும் ஒத்து வர வேண்டும்.  பெண்கள் ஜாதகத்தில் கூட்டுத் தொழில் 
ஸ்தானமான 7ம் வீட்டதிபதி தொழில் ஸ்தானமான 10ல் அமையப் பெற்று, 10 ம் அதிபதியுடன் 
இணைந்து பலமாக இருந்தாலும், 7, 10 க்கு அதிபதிகள் இடம் மாறி பரிவர்த்தனைப் 
பெற்றிருந்தாலும், கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வளமான வாழ்க்கையை அடையமுடியும்.
 

 
No comments:
Post a Comment