Monday 27 August 2012

நவரத்தினங்களில் வைடூரியம்



வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.

வைடூரியமானது மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததாகும். வைடூரியம் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால், இதனை பரிசோதனைக்குப் பின்னரே அணிய வேண்டும். பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளாளல் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும். விலையும் அதிகமாகும். வைடூரிய கல்லின் குறுக்கே ஒரு நூல் பட்டையாகவும் தெளிவில்லாமலும், கல்லின் நிறம் வெளிர் பச்சையாகவும் இருந்தால் விலை அதற்கேற்ப குறைய வாய்ப்புண்டு.

இதில் குறிப்பிடத்தக்கது குவார்ட்ஸ் வகை வைடூரியங்கள் ஆகும். ஆனால் இதன் பெயரில் தான் வைடூரியம் உள்ளதே தவிர சுத்தமான வைடூரியம் இல்லை. எடை குறைந்த குவார்ட்ஸ் வகை வைடுரியங்கள் ப்ரவுன் கலந்து பச்சையாக இருக்கும். இதில் பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (ஜிவீரீமீக்ஷீs ணிஹ்மீ) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (ஙிuறீறீs ணிஹ்மீ) என்றும் அழைக்கின்றனர்.
சுத்தமான வைடூரியத்தின் அழகானது, அதனுள் தெரியும் நூல் போன்ற அமைப்பு வெளிச்சத்தில் மின்னல் போல தெரிவதால் யாரையும் மயக்கிவிடும். மற்ற டைகர் ஐ, புல்ஸ் ஐ போன்றவற்றில் இது போன்ற கவர்ச்சியான அமைப்பு இருக்காது.

வைடூரியங்களில் நமது நாட்டில் கேரளாவில் கிடைப்பதே விலை உயர்ந்ததாகும். இது தவிர, ஒரிஸாவில் கிடைப்பது சற்று விலை குறைந்ததாக உள்ளது. பிரேசில், இலங்கை, அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் கிடைக்கின்றது. வைடூரியக் கல்லை அணிவதால் மிகுந்த செல்வம், செல்வாக்கு உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாம். இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்கள் வராது. மன நிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வைடூரியக் கல்லைத் தங்கத்தில் பதித்து ஆள் காட்டி விரல் அல்லது மோதிர விரலில் அணிந்த கொள்வது நல்லது. வைடூரியத் கல்லை கால சர்பயோகம் உடையவர்களும், கேது திசை நடப்பில் உள்ளோரும், 7,16,25 ஆகிய எண்களில் பிறந்தோரும் அணிவது உத்தமம். அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரக்காரர்களும் அணியலாம்.

புள்ளிகள், பள்ளங்கள், மங்கலான நிறங்கள் உடைய வைடூரியங்கள் தீமையான பலன்களை அடைய நேரிடும். எனவே வைடூரியத்தை நன்கு பரிசோதித்து அணிவது உத்ததமம்.

ஒப்பல், வைடூரியத்திற்கு மாற்றுக் கல்லாக ஒப்பல் என்ற கல்லை அணியலாம். ஒப்பல் கற்கள் ஏழு எண்காரர்களுக்கு மிகவும் உகந்ததாகும். இது பல வண்ணங்களில் கிடைத்தாலும் வெண்மை நிறம் கொண்ட கல்லே சிறந்ததாகும்.

No comments:

Post a Comment