Tuesday 14 August 2012

பெங்சூயி நுழைவாயிலுக்கு எதிரே நிலைக்கண்ணாடி இருக்கலாகாது

பெங்சூயி
நுழைவாயிலுக்கு எதிரே நிலைக்கண்ணாடி இருக்கலாகாது
என்னுடைய தொழில் அனுபவத்தில், நான் பல சந்தர்ப்பங்களில் வீட்டின் நுழைவாசலுக்கு எதிராக நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இது மிகவும் தீய பலன்களைத் தரும். ஏனெனில் கண்ணாடியானது வீட்டினுள் நுைாயும் நல்ல சக்தியை பிரதிபலித்து வெளியே திருப்பி விடுவதால், வந்த சக்தியானது வாசல் வழியே சென்று விடுகிறது.

சில சந்தர்ப்பங்களில், அனபவமில்லாத ஆலோசகர்கள் வாடிக்கையாளர்களை வாசலுக்கெதிரே உள்ள வெற்றுச் சுவரில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்துமாறு கூறிவிடுகின்றனர்.

பார்க்கப் போனால் வாசல் கதவிற்க எதிரே வெற்றுச் சுவர் இருப்பதே தவறு. அதன் மேல் ஆழத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி மாட்டப்பட்டால் அது மேலும் தவறாகும். அழத்தை அதிகரிக்கச் செய்யும் இயற்கை காட்சி ஒட்டுவதுதான் சரி. அந்தப்படம் சாலையாகவோ அல்லது வளைந்து காட்டிற்குள் செல்லும் பாதையாகவோ இருக்கலாம். குறிப்பாக ஆழத்தை உணர்விக்கும் காட்சியாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment