Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - செவ்வாய் (குஜன்)


மங்களன் அல்லது செவ்வாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் செவ்வாய் தசை அல்லது செவ்வாய் அந்தர் தசையின் போது:

  • செவ்வாயின் கடவுளான முருகன் மற்றும் சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
    • முருகன் மந்திரம் "ஓம் சரவணபவாய நமஹ"
    • சிவ மந்திரம் "ஓம் நமச் சிவாய"
    சொல்ல வேண்டும்.

  • தினசரி முருகன் அல்லது சிவன் சோஸ்திரம் படிக்க வேண்டும்.
  • செவ்வாய் மூல மந்திர ஜபம்:

  • "ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஷக் பௌமாய நமஹ",

    40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.

  • செவ்வாய் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • தரணீ கர்ப்ப ஸம்பூதம்
    வித்யுத்காந்தி ஸப்ரபம் !
    குமாரம் சக்தி ஹஸ்தம் ச
    மங்களம் ப்ரணமாம் யஹம்!!




    தமிழில்,

    சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!
    குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
    மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!
    அங்காரகனே அவதிகள் நீக்கு!


  • தொண்டு: செவ்வாய்க்கிழமை நன்கொடையாக சிவப்பு பயறு கொடுக்கவேண்டும்.

  • நோன்பு நாள்: செவ்வாய்.

  • பூஜை: முருகன் பூஜை அல்லது ருத்ர அபிஷேக பூஜை.

  • ருத்ராட்சம்: 3 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • அங்காரக காயத்ரி மந்திரம்

  • வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ பௌம: ப்ரசோதயாத்||

    செவ்வாய் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின் 36 வது மற்றும் 37 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    மேலும் செவ்வாய் கடன்களை தீர்ப்பவர் மற்றும் செல்வம் கொடுப்பவர். பின்வரும் செவ்வாயின் இந்த ஸ்தோஸ்திரம் கடன் தீர்க்கவும், செல்வம் பெருகவும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

    No comments:

    Post a Comment