Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - புதன்


புதன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புதன் தசை அல்லது புதன் அந்தர் தசையின் போது:

  • புதனின் கடவுளான விஷ்ணுவைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி விஷ்ணு சோஸ்திரம் படிக்க வேண்டும்.
  • புத மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் புதாய நமஹ",

    40 நாட்களில் 17000 முறை சொல்ல வேண்டும்.

  • புதன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • ப்ரிங்கு கலிகா ச்யாம்
    ருபேணா ப்ரதிமம் புதம்!
    ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
    தம் புதம் ப்ரணமாம் யஹம்!!




    தமிழில்,

    இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
    புத பகவானே பொன்னடி போற்றி!
    பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
    உதவியே யருளும் உத்தமா போற்றி!!


  • தொண்டு: புதனன்று நன்கொடையாக உளுத்தம் பருப்பு கொடுக்கவேண்டும்.

  • நோன்பு நாள்: புதன்.

  • பூஜை: விஷ்ணு பூஜை.

  • ருத்ராட்சம்: 10 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • புத காயத்ரி மந்திரம்

  • கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ புத: ப்ரசோதயாத்||


    புதன் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 35 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    No comments:

    Post a Comment