Saturday, 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - வியாழன் (குரு)


குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது:

  • குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.

  • குரு மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",

    40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.

  • குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • தேவானாம் ச ரிஷஷீணாம் ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்!
    புத்தி பூதம் த்ரிலோகேசம்
    தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!




    தமிழில்,

    குணமிகு வியாழக் குருபகவானே
    மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
    பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
    கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!


  • தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

  • நோன்பு நாள்: வியாழன்.

  • பூஜை: ருத்ர அபிஷேகம்.

  • ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • குரு காயத்ரி மந்திரம்

  • வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ குரு: ப்ரசோதயாத்||


    குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    No comments:

    Post a Comment