Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - சூரியன்

சூரியன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சூரிய தசை அல்லது சூரிய அந்தர் தசையின் போது:

  • சூரியனின் கடவுளான சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி ஆதித்ய ஹிருதய ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.
  • தினசரி காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

  • சூரிய மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ",

    40 நாட்களில் 6000 முறை சொல்ல வேண்டும்.

  • சூரிய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • ஜபா குஸூம ஸங்காசம்
    காச்யபேயம் மஹாத்யுதிம்!
    தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
    ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!




    தமிழில்,

    சீலமாய் வாழச் சீரருள் புரியும்
    ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி!
    சூரியா போற்றி, சுதந்திரா போற்றி!
    வீரியா போற்றி, வினைகள் களைவாய்!


    - 7000 முறை சொல்ல வேண்டும்.

  • தொண்டு: ஞாயிறன்று நன்கொடையாக கோதுமை, அல்லது சர்க்கரை மிட்டாய் கொடுக்க வேண்டும்.

  • நோன்பு நாள்: ஞாயிறு.

  • பூஜை: ருத்ர அபிஷேக பூஜை.

  • ருத்ராட்சம்: ஏகமுகி (ஒரு முகம்) அல்லது 12 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.

  • சூர்ய காயத்ரி மந்திரம்

  • பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
    தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||


    சூரிய தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 73வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    No comments:

    Post a Comment