Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 210 - சந்திர மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


பாரப்பா சந்திர திசை சனியன்புத்தி
பகர்ந்தநாள் மாதமது பத்தொன்பதாகும்
நேரப்பா அதனுடைய பலத்தைச் சொல்வோம்
நேரிழையாள் மரணமதாம் நெஞ்சுதனில்நோவாம்
காரப்பா கனகமது சிலவேயாகும்
கள்ளரால் சோரர்பயம் துக்கமுண்டாம்
சாரப்பா சத்துருவால் இடஞ்சலுண்டாம்
சஞ்சலங்க ளுண்டாகும் தவமேபாழாம்


மேலும் இச்சந்திரதிசையில் சனிபகவானின் பொசிப்புக்காலம் 19 மாதமாகும். இக்காலகட்டத்தில் அவனது பலத்தையும் புலிப்பாணியாகிய நான் போகரது கருணையினால் கூறுவேன் அதையும் தேர்ந்து அறிவாயாக! மனம் விரும்பி இச்சாதகனை மணந்த ஜாதகி மரணமெய்த நேரும். அதனால் ஜாதகனுக்கு இதய நோய் ஏற்படும். பல விதத் தங்க ஆபரணங்களும் விரயமாகும். கள்ளர் பயமும் ஏற்படும். சத்துரு உபாதையும் உண்டு. பலவித சஞ்சலங்கள் ஏற்பட்டு இதுவரை அனுபவித்த இன்பங்களும் பாழாகும். மணமிக்க சந்தனம் முதலியகந்தப் பொருள்களை அணிவான். கல்யாணம் முதலிய சுபகாரியங்கள் நிகழும்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment