Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 299




கேளப்பா ராசிபனி ரெண்டுக்குள்ளே
கனமுள்ள கோள்கள் நிலையறியாமல்தான்
பாழப்பா பலவாறாய் சக்கரம் பூட்டி
பணம்பறிக்கும் விந்தையது பாரிலேதான்
சூளப்பாசோதிடமும் முன்னூறுக்குள்
சுகமாகப்பாடி வைத்தேன் நுணுக்கமாக
நீளப்பா போகருட கடாட்சத்தாலே
நீணிலத்தில் புலிப்பாணி நிகழ்த்தினேனே.


நான் சொல்லுவதை நலமாக நீ கேட்பாயாக! அறிவற்றவர்கள் 12 ராசிக்குள் கிரகங்களைக் கூட்டி வைத்து பணம் பறிக்க இதுதான் சரியான வித்தையென்று இதுகாறும் பாரில் கூறி வந்தார்கள். ஆனால் நானோ 300 பாட்டுக்குள் நுணுக்கமாக என் குருநாதரான போகருட கடாட்சத்தாலே இதனை நீ உணர்வாயாக

No comments:

Post a Comment