Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 174


இடித்திட்டே னின்னமொன்று யியம்பக்கேளு
இந்துவுக்கு ஈரைந்தில் எங்கோநிற்க
அடித்திட்டேன் அத்தலத்தோன் கேந்தரிக்க
அப்பனே சாமியுந்தான் அஞ்சுநாலில்
குடித்திட்டேன் குழவிக்கு வித்தைபுத்தி
குவலயத்தில் போர்விளங்கோன்படைக்கிஆட்சி
படித்திட்டேன் போகருட கடாட்சத்தாலே
பண்பாகப் புலிப்பாணி நடித்திட்டேனே.


நான் வேறொரு கருத்தினையும் கூறுகிறேன். நன்றாக ஆராய்ந்து அதன் பொருளை உணர்க. குற்றமில்லாத சந்திரனுக்குப் பத்தாமிடத்தில் அரசன் எனக் குறிப்பிடப்படும் குரு நிற்க, அந்த வீட்டிற்குடையவன். 1,4,7,10 ஆகிய கேந்திரத்தில் இருக்க. பெருமைக்குரியவனே, அச்சாதகன் தான், தனக்கு 5,4 ஆகிய இடங்களில் வித்தை புத்திக்குரியவர்கள் நிற்க அவன் இந்நிலவுலகில் நிலைத்த பேர் பெறுவோன் ஆவான். பெரிய படையை நடத்திச் செல்லும் வீரன் என்றும் நீ கூறுவாயாக என, போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment