Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 173


சாற்றினேனின்ன மொன்று செப்பக்கேளு
சந்திரனார்க் கீரைந்தில் எங்கோநிற்க
கூற்றினேன் குமரனுக்கு யோகம்மெத்த
கோவியிடம் சேனாதிபதியுமாவன்
பூட்டினேன் பீரங்கி வெடியினாலே
போர்புரியும் வீரர்களைச் சின்னஞ்செய்வன்
நாட்டினேன் நரக்குருவும் தனுசிலேற
நலமாகப் புலிப்பாணி பிடித்திட்டேனே.


இன்னுமொரு கருத்த்னையும் நான் கூறுகிறேன். அதையும் நீ மனங்கோண்டு கேட்பாயாக! விளக்கம் பெற்ற சந்திரனுக்கு ஈரைந்து எனக் கூறப்படும் பத்தாமிடத்தில் குரு நிற்க அக்குமரனுக்கு யோகம் மிகவும் உண்டென்று கூறுக. அவன் அரண்மனையில் அரசனுக்குகந்த சேனாதிபதியாக இருப்பான். பெரிய பீரங்கி வெடகளால் படைகளைச் சின்னாபின்னம் செய்பவரை இச்சாதகன் ப்ன்னப்படுத்தி அழித்தொழிப்பான். இந்நிலை தனுசுதனில் குபகவான் நிற்கநயமாக விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment