Monday 3 September 2012

மகம் நட்சத்திரம்


மகம் நட்சத்திரம் :

 பொது: ஏர் - உழவு - கலப்பை - விவசாய பூமி - பல்லக்கு - பாசனம் - விவசாயம் - தொப்புள் - குடல் - கர்ப்பம் - வயிறு - டிராக்டர் - கடப்பாறை - விதை - உரம் - வேர் - பெல்ட் - ஜிப்பு - குப்பை - குழி - பொந்து - கத்தரிக் கோல் - அரசியல் - பதவி - பிரயாணம் - தடை - காக்கி - வலை - பைப் - குழாய் - கைத்தடி - மரம் - கொடி - பூச்சி - ஒட்டடை - தானியம் - பச்சரிசி - குளம் - அதிக பூமி - அரிசி மண்டி


மிருகம் மற்றும் பட்சி : எலி - மயில் - கிளி - பன்றி - வராகம்

தெய்வம்: வினாயகர் ; வாகனம் : மூஷிக வாகனம்

நோய் : வயிறு - கேஸ் டிரபிள் - கர்ப்பத் தடை - சிசேரியன் - அபார்ஷன்

எதிர்மறை: குழப்பம் - ஏமாற்றம் - சஞ்சலம் - திரும்பத் திரும்ப நினைக்கும்

குணம் - சந்தேகமான எண்ணம் - உள் மனசு - பிடிவாதம் - வைராக்யம் - கற்பனா சக்தி - ஜன்ம சிந்தனை ( தீராக் குழப்பம் - தீராத ஒன்று என்பதனை உணரவே மாட்டார்கள்)

நேர்மறை: இறை பக்தி - வினாயகர் பக்தி சிறப்பு தரும் - ஆசிரம வாழ்க்கை - அரசாட்சித் தன்மை - நிர்வாகத் திறமை - அமானுஷ்ய சக்தி இருப்பதாக பிரமை ( மாயையின் வெளிப்பாடு)

வினாயகர் வழிபாட்டில் : அவல் பொரி - கொழுக்கட்டை முக்கியமானவை.


மகம் -1- மாணிக்கம் - பவளம் - மற்றும் பல்வேறு வகையான விளக்குகள் - வியாபாரம் சிறப்பு.

மகம் - 2-மினி லாரி தயாரிப்பு - கம்பளி மற்றும் ஜமுக்காளம் தயாரிப்பு -தொழில் சிறப்பு.

மகம் - 3-வாழையிலை - வாழைப் பழ வியாபாரம் - சிறைக் கைதிகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை காண்டிராக்ட் எடுத்தல் ( உணவுத் தயாரித்தல்.போன்றவை.....)

மகம் - 4-ஜெயிலில் கைதியாய் இருத்தல் - ஜெயில் வார்டன், போலீஸ் வேலை.


குண இயல்பு:

மகம் -1- அரசனின் குணம் - குளிர்ந்த மனசு ( சில நேரங்களில் )
மகம் - 2-பாம்பின் குணம் - பழி வாங்கும் எண்ணம் தீவிரம்
மகம்: 3-தெய்வ சிந்தனை - இளவரசனைப் போல இருத்தல் - ஆற்றல்
மகம் - 4-தனி மனிதன் - தனிமை விரும்பி - தீர்க்க தரிசனம் ( சில விடயங்களில் )


பல்லக்கு - நுகத்தடி - கலப்பை என குறிப்பதால் பண்ணையார் போல வாழ்வார். அதாவது இவரது துன்பத்தைப் பலர் ஏற்று , தாங்கிக் கொண்டு பல்லக்கில் சுமந்து செல்வது போல இவரை உயர்த்துவார்கள்.
பலர் உழைத்து ஒரு முதலாளி போல இவரை உயர்த்துவார்கள்.


மகத்தில் பிறந்தவர்களுக்கு ரேவதி நட்சத்திரத்தின் பெயர்கள் ஆகாது. காலத்தின் பெயர், பூக்கள் பெயர் ஆகாது.



மகத்திற்கு சுவாதி நட்சத்திரம் சாதகம் என்பதால், மருதமலை முருகருக்கு சுவாதி நட்சத்திர தினத்தில் பால், தேன் அபிஷேகம், தினை மாவு தானம் செய்தல் அவசியம். மேலும் அன்றைய தினத்தில், வினாயகருக்கு அவல் பொரி கொழுக்கட்டையுடன் கூடிய அர்ச்சனை செய்தலும் வினாயகருக்கு ஏழு நெய் அகல் விளக்கும், முருகருக்கு ஆறு நெய் அகல் விளக்கும் ஏற்றுதல் நலம் பயக்கும்.


 
மகம் நட்சத்திரத் தினத்தன்று மண்டிக்காடு பகவதி அம்மன் ஆலயம் தரிசனம் செய்தலும், அடி பிரதட்சை எனப்படும் பாத அடி பாத வலம் மும்முறை ஆலயம் சுற்றி வருதல் சிறப்பு. ( தனி பதிவாக இவ்வாலய வழிபாட்டு முறை பின்னர் வரும் )


 
ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில். அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று. அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன் என்பது சிறப்பு.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில்
மண்டையப்பம் : பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.
இருமுடி கட்டிப் பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.
காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.இங்கு பிரசாதமாக புட்டமுது கொடுக்கப்படுகிறது.
மாசிப் பெருந்திருவிழா - 10 நாள் திருவிழா
10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள் குறைபாடு,திருட்டி, தோடம், தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள்.
கல்யாண காரியங்களுக்கு பட்டு, தாலி காணிக்கை செலுத்தலாம் உடல் நலம் குணமாக வெள்ளியில் கை, கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது. திருட்டி தோடம் கழிய வெடி வழிபாடு செய்யப்படுகிறது.
 

No comments:

Post a Comment