Wednesday 12 September 2012

மாசி மகம்

 

இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாள் மாசி மகம் ஆகும்.


இது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் வருகிறது. இன்று மாசி மகம். இன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

இந்த மாசி மகத்தில் கடல் நீராட்டு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய எம்பிரான் திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில்,

 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்


கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்


அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி


நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்


- என்று குறிப்பிட்டு பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினர்ர் என்பது வரலாறு,


சரி,, இவ்வளவு சிறப்புமிக்க மாசி மகத்தை பற்றி தெரிந்தும், நம்மால் எந்த கடலுக்கும் போகமுடியவில்லை என வருந்துபவர்களுக்காக எம்பிரான் திருநாவுக்கரசர் ஒரு அருள் செய்துள்ளார், - அது தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிமகத் திருவிழா நடைபெறும் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் அருளிச் செய்த தேவாரம் ஆகும்,

 

ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை


இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே


கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக்


குறியில் அறுகுணதது ஆண்டுகொண்டார் போலும்


தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை,


சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க்


கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த


குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே,

 

என்னும் தேவாரமாகும்,


யாராக இருந்தாலும் வீட்டில் குளியலறையில் இறைவனை நினைநது இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால் அவர்கள் கடலாடியதற்கு சமமான பலன்களை பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை ,,,

 

எனவே பாடிவிட்டு குளியுங்கள்


ஏற்கனவே குளித்திருந்தாலும் 2வது முறையாக


இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளியுங்கள் -


புண்ணிய கடலாடிய பயனை பெறுங்கள்.

No comments:

Post a Comment