Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 266 - கேது மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


காணவே கேதுதிசை வியாழபுத்தி
கனமான மாதமது பதினொன்றாகும்
தோணவே நாளதுவும் ஆறதாகும்
துகையான தனங்களும் புத்திரனாலுண்டாம்
பூணவே மூவுடையாள் நிர்த்தனம் செய்வாள்
பூமிதனில் வெகுலாபம் பொருந்திக்காணும்
நாணவே ராசாங்க யோகம் பெற்று
நன்றாக சுகம் விளையும் யோகந்தானே


கேது மகாதிசையில் வியாழ பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 6 நாட்கள் ஆகும், இக்கால கட்டத்தில் புத்திரனால் வெகுதனம் உண்டாகும். மனம் விரும்பிய மனைவி மகிழ்ச்சிக் கூத்தாடும் வண்ணம் மனையில் மகிழ்ச்சி பொங்கும். பூமிதனில் விளைச்சல் மிகுந்து வெகு லாபம் தன்னிறைவாக வந்தடையும். வெகுவான அரசாங்க நன்மைகளும் உதவிகளும் சேர்ந்து மனச்சோர்வகற்றும். பலவகையிலும் சகாயங்கள் நேர்ந்து யோகத்தைச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment