Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 261 - கேது மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


பகையான கேதுதிசை சுக்கிரபுத்தி
பாங்கில்லா மாதமது பதினாலாகும்
தகையான அதன் பலனைச் சாற்றக்கேளு
தாழ்வில்லா சத்துருவால் விலங்குண்டாகும்
நகையான பூஷண்ங்கள் நசிவதாகும்
நாரழையாள் தன்னுடனே அபமிருத்துகாணும்
வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
மனைவிமக்கள் தன்னுடனே வாழ்வன்காணே


கேது மகாதிசையில் சுக்கிரபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவரால் நிகழ்த்தப்பெறும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! குறைதல் இல்லாத பகைவரால் விலங்கு பூணுதல் நேரும். பலவகையான பொன்னாபரணங்களும் விரயங்களாகும். மனைவிக்கும் இச்சாதகனுக்கும் அபமிருந்து தோடம் காணும். எனினும் தன்மையுள்ள அரச சகாயத்தால் மனத்தில் மகிழ்ச்சியுண்டாகி மனைவி மக்களுடன் சுகித்து வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment