Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 224 - இராகு மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


காணவேராகு திசை வருஷம் பதினெட்டு
கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி
தோணவே மாதமது முப்பத்திரண்டு
துகையான நாளதுவும் பனிரெண்டாகும்
யேனவே சத்துருவால் நிவந்தனையோடும்
யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழ்
போனவே பழம் பொருளும் வேதமாகும்
பிலமான நோயதுவும் கூடிக்கொல்லும்


சிறப்பு மிக்க இராகு மகாதிசையானது 18 ஆண்டுகளாகும். இதில் இராகுவின் பொசிப்புக் காலம் அதாவது சுயபுத்தியானது 2 வருடம் 8 மாதம் 12 நாள்களாகும். இக்காலகட்டத்தில் சத்துருக்களால் தொல்லைகளும் நிபந்தனையோடும் எண்ணமுள்ளவனாய் மனைவி இருப்பது கண்டு மனம் வெதும்புதலும், குடியிருக்கும் மனைபாழாதலும் மூதாதையர் சேர்த்து வைத்த பழைமையான கலைப்பொருள்களும் தம் பொருளும் சேதமாகி விரயம் காட்டும். அதுமட்டுமல்லாமல் பலமான பிணியுண்டாகி உயிர்க்குக் கேடு செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment