Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 217 - செவ்வாய் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


காணவே சேய்திசை வியாழபுத்தி
கனமான நாளதுவு மாதம்பதினொன்று
நாணவே நாளதுவும் ஆறதாகும்
நன்றாக, அதன்பலனை நவிலக்கேளு
பூணவே பூவையரும் பொருந்தியிருப்பாள்
புகழான சிலவுடனே சிறப்புண்டாகும்
தோணவே சத்துருவும் வணக்கமாவான்
தொடுத்ததொரு காரியங்கள் வெற்றியாமே


இனியொன்று இச்செவ்வாய் தசையில் வியாழபகவானின் பொசிப்பானது 11மாதம் 6 நாள் ஆகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கவனமாகக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! பூணணிந்த மாதான மனைவியும் மனையில் பொருந்தி அன்புடன் இருப்பாள். புகழானது பெருகும். மிகப் பல சிறப்புகள் ஏற்படும். சத்துருக்கள் நேசமாவர். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையில் வெகுவாக முன்னேறி நற்பெயரும் புகழும் தோற்றுவிக்கும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment