Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 125


அறிவித்தேன் அஞ்சுக்கு அஞ்சொன்றாலும்
அப்பனே அப்பதிக்கி கோணந்தன்னில்
தெரிவித்தேன் திரவியமும் காடியுண்டு
திடமான மனைகட்டி ஆளுவானாம்
குரிவித்தேன் ஆலயமும் பழுதுபார்ப்பன்
கொற்றவனே ரஜிதபாத் திரமுங்கொள்வன்
புரிவித்தேன் பதியோனும் வியமாறெட்டில்
பதறாதே பண்டுபொருள் விரயமாமே


இன்னமொரு கருத்தினையும் உனக்கு அறிவிக்கின்றேன் அதனையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! ஐந்திற்கு ஐந்தான ஒன்பதாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்குத் திரிகோண (1,5,9) ஸ்தானத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு திரவிய லாபமும் வயல், வரப்பு, தோப்பு முதலியனவும் நல்ல தொட்டிக் கட்டுள்ள அரண்மனை போன்ற வீடும் அமைந்து நல்ல முறையில் வாழ்வான். அதுமட்டுமல்லாமல் கோயில் புனருத்தாரணம் செய்வான். மேலும் பரோபகாரியாகவும் பேரும் புகழும் பெற்று வாழ்வான். ஆனால் இலக்கினாதிபதி 12,6,8 ஆகிய இடங்களில் நின்றால் வெகுதன விரயம் ஏற்படும். அதாவது பூர்வீக சொத்துகள் கூட அழியும் என்று போகர் ஆணையால் புலிப்பாணி தெரிவித்தேன்.

No comments:

Post a Comment