Monday, 13 August 2012

நாடி சோதிடம் பாகம் - 2

நாடி ஜோதிடம்
நாடி சோதிடம் பாகம் - 2
விதி 10:
ஒரு ஜாதகத்தில் ராகு, கேது அச்சுக்கள், அந்த ஜாதகத்தை இரு பாகமாகப் பிரிக்கும். அப்படிப் பிரிக்கும்போது அச்சுக்கு மறுபுறத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பான் எனக் கூறலாம். அதேபோன்று பெண் ஜாதகத்தில் அச்சுக்கு ஒருபுறம் செவ்வாய் இருந்து மறுபுறம் சுக்கிரன் இருந்தால் அந்தப் பெண் விதவை ஆவாள் என முடிவு செய்யலாம். பெண் ஜாதகத்தில் செவ்வாய் கணவனையும் சகோதரனையும் குறிக்கும்.

விதி 11:
ஒரு ஜாதகத்தில் நீச்சம் பெற்ற கிரகம்கூட சாதகமான பலனைத் தரமுடியும். (இங்கு கிரகம் எனக் குறிப்பிடுவது அனைத்தும் காரகக் கிரகங்களையே குறிக்கும்) உதாரணமாக குருவானவர் நீச்சம் பெற்று மகரத்தில் இருக்கிறார். அவருக்கு 2,12,7,5இல் கிரகம் இல்லாமல் இருந்து, குருவுடன் சூரியன் சேர்ந்து இருந்தால் குருவின் நீச்சத்துக்குப் பங்கம் ஏற்படுகிறது. அப்போது அவர் நன்மையான பலனையே தருவார்.

விதி 12:
ஒரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை அடையும்போது தன் சொந்த வீட்டிற்குச் செல்லும். அப்போது நீச்ச பங்கம் ஏற்படும். செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்று நின்று, சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம் பெற்று பரிவர்த்தனை பெறுகிறது. இந்தப் பரிவர்த்தனையின்போது நீச்ச பங்கம் ஏற்படுகிறது.

விதி 13:
ஒரு கிரகம் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் அடைந்து பரிவர்த்தனை பெற்று இருந்தால், அந்தப் பரிவர்த்தனை மூலம் தனது வீட்டிற்குச் செல்லும்போது அஸ்தமன தோஷம் நீங்குகிறது. குறிப்பாக மேஷத்தில் சூரியன் 10 டிகிரியிலிருந்து, குரு 12 டிகிரியில் இருந்தால் அஸ்தமனம். அதேசமயம், செவ்வாய், தனுசு அல்லது மீனத்தில் நின்றால் அந்த தோஷம் நிவர்த்தி அடைகிறது.

விதி 14:
ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், அது ஆண் ஜாதகமாக இருந்தால், குருவை முதலாகக்கொண்டு வரிசைப்படுத்தியும் பெண் ஜாதகமாக இருந்தால், சுக்கிரனை முதலாகக் கொண்டு வரிசைப்படுத்தியும் எழுதிக்கொள்ள வேண்டும்.

விதி 15:
பொதுவாக, கிரகங்கள் இடமிருந்து வலமாக வருவதுதான் வழக்கம். ஆனால் வக்கிரம் அடையும் கிரகம் ராகு, கேதுவைப்போல் பின்னோக்கி, அதாவது தான் இருக்கும் வீட்டிற்கு 12ஆம் வீட்டை நோக்கி நகரும்.

விதி 16:
நாடி சோதிட முறைப்படி, காரக கிரகத்திற்கு அடுத்து நட்பு கிரகம் நின்றாலும் பகை கிரகம் நின்றாலும் தங்களது காரக குணங்களை, காரக கிரகத்தின் மேல் படியவைப்பார்கள். உதாரணமாக ஒரு வீட்டில் (பெண் ஜாதகம்) சுக்கிரன் வக்கிரமாக இருந்து, அதற்கு அடுத்து புதன் இருந்தால், (புதன் நண்பனைக் குறிக்கும் கிரகம்) அது காதலைக் குறிக்கும் கிரகமாகும். அந்தப் பெண் காதல் வயப்படுவாள் என முடிவு செய்யலாம்.

விதி 17:
ஒரு உச்ச கிரகம் பரிவர்த்தனை அடைந்து, ஒரு பகைக் கிரகத்தின் மத்தியில் சிக்கினால், சுப பலம் முழுவதையும் இழக்கும். உதாரணமாக, சனி துலாத்தில் உச்சம் பெற்று, சுக்கிரன் மகரத்தில் செவ்வாய், கேதுவுடன் இருந்தால், உச்சம் பெற்ற சனி பரிவர்த்தனை மூலம் மகரத்திற்குச் செல்லும்போது பகைக்கிரகத்தின் மத்தியில் சிக்கி தனது பலத்தை இழக்கிறது.

விதி 18:
ஒரு காரக கிரகம், எந்தத் திசையில் இருக்கிறதோ, அதே திசையில் உள்ள கிரகங்களை காரகக் கிரகத்தோடு இணைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

கிரககாரத்துவங்கள்

சூரியன்: தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல், தந்தையின் தொழில்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம், கவிதை, ஓவியம், நீர் தொடர்பான தொழில், பார்வதி.

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

புதன்: கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர் கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி.

சுக்கிரன்: மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மது பானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், பிந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மரு மகள்.

சனி: மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா, அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன்.

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன், கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், தவம், மனவெறுப்பு, கொலை செய்தல்.

No comments:

Post a Comment