Sunday 5 August 2012

H இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? (முழு கணிப்பு)


H என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் குதிரை வேகத்தில் பாய்ந்து சென்று விரைவில் காரியம் முடிப்பதில் கில்லாடி. பேச்சினாலும், செயல்களாலும் பிறர் கவனத்தை எளிதில் கவர்வீர்கள். கவலையான நேரத்திலும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் இவர்கள். உங்கள் எழுத்தில் சூரியக்கதிர்கள் குவிக்கப்படுவதே இதற்குக் காரணம். சில நேரங்களில் நிதானம் தவறுவதுண்டு. எனவே, கட்டுப்பாட்டை மனத்தளவில் வளர்த்துக் கொள்வது நல்லது.
இவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் அவசியம் தேவை. கேலி, கிண்டலுடன் ஹாஸ்ய வெடிகளை வெடித்து. மற்றவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர். ஆடை அணிவதில் தனிக் கவனம் செலுத்துவார்கள். எந்த உணவையும் தவிர்க்க மாட்டார்கள். வாசனைத் திரவியங்களின் பேரில் அதிக விருப்பம் உண்டு.
எந்தக் காரியத்திலும் வெற்றி உறுதியாகக் கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகே அதில் இறங்குவர். அடுத்தவர்களை அன்பாகப் பேசி வேலை வாங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எந்தச் செயலைச் செய்யும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர். அழகான தங்குமிடங்களும், வர்ணஜாலமுள்ள காட்சிகளும். அலங்கார வீடுகளும் இவர்கள் மனதில் ஆழப்பதிந்தவை. பெண் விஷயத்தில் சிலர் கொஞ்சம் `வீக்’ என்பதால், சுதாரிப்பாக இருப்பது சிறந்தது. மசால் கலந்த உணவு வகை, மாமிச உணவை விரும்பி உண்பர். இதனால், அடிக்கடி வயிறு உபாதைகளுக்கு உட்படுவர். நடத்த முடியாத விஷயங்களைக் கூட, உறுதியான பேச்சினால் நடத்தி பிறரை ஆச்சரியமடையச் செய்வர்.
அனாவசியச் செலவு செய்வதிலும் கில்லாடி. இதைக் கட்டுப்படுத்துவது வாழ்வின் பிற்பகுதிக்கு நலன்தரும். வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்து, பொருளாதாரக் குறைபாட்டை ஏற்படுத்திக் கொள்வர். இதைத் தவிர்த்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் எதிர்காலத்தை நலமாக்கிக் கொள்ளலாம்.
வெற்றிகளைக் குவிப்பது இவர்களின் திறமை. மாயமந்திர, தந்திரங்கள் இவர்களுக்கு அத்துப்படி, பொதுவாழ்க்கையில் நிரம்ப அக்கறை கொள்ளும் இவர்களால், நலிந்து போன தொண்டு நிறுவனங்கள் நிமிர்ந்து நிற்கும் பெருமையுண்டு. முண்டாசுக் கவிஞன் பாரதி போல் வரிந்து கட்டிக் கொண்டு, நாட்டிற்காக உழைக்கும் இவர்களுக்கு நன்றியைச் சொல்லலாம்.
ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டேயிருப்பதால் இவர்களின் பின்னால், ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். இலவச ஆலோசனைகளை எல்லாருக்கும் சொல்வர். வெளியூருக்குச் சென்றால், `இது புது இடமாயிற்றே. பழக்கமில்லாமல் என்ன செய்வது?” என்பது போன்ற தயக்கம் வரவே வராது. ஏதோ, அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் போல் மக்களை, தன் சொல்லால் மயக்கி, அவ்வூரின் நம்பர் 1 ஹீரோ ஆகிவிடுவர்.
மற்றவர்களைத் தன் வசம் இழுக்கும் திறமை கொண்டவர்கள். உலகில் எத்தனையோ பேரின்பம் உண்டு என்பதை மனதில் கொண்டவர்கள். உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் இவர்கள் பல வியாதிகளை விரட்டி விடலாம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment