Monday 6 August 2012

F யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? (முழு கணிப்பு)


பேச்சை விட செயல்திறன் அதிகம் கொண்டது இவ்வெழுத்து. பிடிவாதம், நிர்வாகத்திறன், உடல்வளம், துணிச்சலை இவ்வெழுத்துக் குறிக்கிறது. எங்கும் துணிச்சலுடன் சென்று காரியங்களை முடித்துக் கொள்பவர்கள் F எழுத்துக்காரர்கள். பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், குழந்தை மனது இவர்களுக்கு.

இவர்களின் நிர்வாகத்திறன் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர அழைப்பு வரும். இவர்கள் நட்பின் இலக்கணமாக விளங்குவர். நண்பர்களை அரவணைத்துச் செல்லும் இவர்கள் நண்பர்களின் அபிப்பிராயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டால் வாழ்வில் உயரலாம்.

ஆன்மீகத்தின் மீது பற்று இருக்கும். பெரும்பாலானவர்கள் அறிஞராக விளங்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் புகழுக்கு அடிபணிவர். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இதன் காரணமாக இவர்களை ஆணவம் பிடித்தவர் என காது படும்படியே சிலர் தூற்றுவார்கள். ஆனால், அதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் தங்கள் சொந்தப் புராணத்தைத் தொடர்வார்கள். செய்நன்றி மறக்காதவர்கள். உடல், மனபலம் நிறைந்த இவர்களை வியாதிகள் அதிகமாக அண்டாது. அப்படியே வந்தாலும் தாங்கும் சக்தி அதிகம். இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு பெயரின் மற்ற பகுதிக்கும் பரவுவதால் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவர்.

சோர்வுடன் இருப்பவர்களை உத்வேகப்படுத்தி சுறுசுறுப்படையச் செய்து விடுவர். பேச்சினால் அடுத்த வரை ஈர்க்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. எப்பொழுதும் நாட்டைப் பற்றியும், எளிமை பற்றியும் பேசும் இவர்கள், தங்கள் பிடிவாதத்தால் பல நண்பர்களை இழக்க நேரிடலாம். பலருக்கு ஆலோசனை சொல்லும் இவர்கள். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையை ஏற்பதில்லை. நல்ல ஆலோசனைகளை ஏற்று நடந்தால் பல நன்மைகளை அடையலாம்.
அதிகமான பேச்சாற்றலால் பல நண்பர்கள் காணாமல் போய்விடுவர்.
இயற்கையின் சீற்றம்போல் இவர்களின் நடவடிக்கை இருக்கும். யாரும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நண்பர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். உறவினர்களும் இவர்களுக்கு எதிராகச் செயல்பட நேரிடலாம். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலருக்குத் தங்கள் பழங்காலக் கதையை மற்றவர்களிடம் அளந்து விடுவதில் அலாதிப்பிரியம் உண்டு. ஆனால், தேவையற்ற விஷயங்களைப் பிறரிடம் கூறினால் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். இதை இவர்கள் தவிர்ப்பது நல்லது. பிறவியிலேயே பெருந்தன்மை கொண்ட இவர்களுக்குத் தன்னம்பிகை அதிகம். சுதந்திரமான மனப் போக்கை விரும்புவார்கள்.

இளகிய மனமும், இரக்க சுபாவமும் அதிகமான இவர்கள் தர்மவான்களாய் விளங்குவர். அறிவியல் ரீதியாக மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். தங்களைப் பற்றிப் பெருமையடித்தாலும் பிறரது சிறப்புத் தன்மையையும் ஏற்றுக் கொள்வார்கள். இரும்பு போன்ற உறுதியான உள்ளம் உண்டு. நிதானத்துடன் நடந்து எதிலும் வெற்றி காண்பார்கள். A,I,J,Q போன்ற முன் எழுத்து வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நலம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment