Monday, 13 August 2012

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்

தமிழ் மாதப் பலன்கள்
வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்

ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிப்பதை வைகாசி மாதமென்று அழைக்கிறோம். இந்த ராசி சுக்கிரனுக்கு ஆட்சிவீடும் சந்திரனுக்கு உச்சவீடும் ஆகும். ஐம் பெரும் பூதங்களில் ஒன்றான மண்ணை இந்த மாதம் குறிக்கின் றது. சுக்கிரனுடைய ஆதிக்கம் பெற்றதால் சுக்கிரனின் அம்சங் களாகிய இனிமை, வசீகரத் தோற் றம், ஆடம்பரத் தோற்றம், ஆடம் பர வாழ்க்கை குறித்த ஆசை, கேளிக்கை வினோதங்களில் ஈர்ப்பு என்பன இவர்களது பெருவிருப்பங்களாக அமையும். தனது நிலை தாழ்ந்தாலும் ஆடம் பரத் தின்பால் இவர் கொண்ட மோகம் தணியாது.

அளவான உயரம் கொண்டவராக இருப் பர். கழுத்துப்பகுதி நீண் டிருக்கும். அடர்த்தியான முடி, குட்டையான, விரி வான மூக்கு, விரிந்த மார்பு, கட்டுடல், ஒளி படர்ந்த கண்கள், ஆழ்ந்து நோக்கும் நேரிய பார்வை, சிறிய ஆனால் நேர்த் தியான பல் வரிசை, அகன்ற நெற்றி உடைய வர்களை, வைகாசி மாதத்தில் பிறந்தவர்களெனச் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.

சித்திரையில் தோன்றியவர்களின் பதற்றத் தன் மைக்கு நேரெதிரானவர்கள். இம்மாதத்தில் பிறந்த வர்கள் நிதானம் மிகுந்தவர்கள். அவசர அவசர மாக விஷயங்களைத் தலைக்குள் போட்டுக் குழப் பிக்கொள்ளாமல், விஷயங்களைப் பொறுமை யுடன் சிந்தித்து முழுதாக விளங்கிக் கொண்டபின் ஆறுதலாக செயலில் இறங்குவர். இன்ப, துன்பங் களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்வர்.

எதற்கும் அஞ்சா நெஞ்சினர். ஆனாலும் கல் நெஞ்சக்காரர்களல்லர்.

மொத்தத்தில், வைகாசியில் பிறந்தோர், சித்தி ரையில் பிறந்தவர்களுக்குத் தலைகீழான குணா திசயங்கள் உடையவர்கள்.
எடுத்துக்கொண்ட காரியத்திலுள்ள சிரமத் தைப் பொருட்படுத்தாது வெற்றிகரமாகச் செய்து முடிப்பர். வழியிலும் சரி, வாழ்க்கையிலும் சரி. தூரத்தைப் பற்றிக் கவலைப்படாது கால்நடையாக வேனும், மெல்ல மெல்லப் போய்ச் சேருவர். எடுத் துக்கொண்ட வேலையை முடிக்கும்வரை பசியோ, தூக்கமோ இவரது கவனத்தைக் கலைத்துவிட முடியாது.

அசாத்திய பொறுமைசாலிகள். எடுத்துக் கொண்ட வேலையை வேகமாக முடிப்பதைவிட நிறைவாக, நிதானமாகச் செய்வதில் அக்கறை காட்டுவர். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதவர்கள்.அத னால் சகிப்புத் தன்மை மிகுந்து காணப்படும். ஒழுக்கம், நாணயம் இவையிரண்டையும் இரு கண்களாகக் கொண்டவர். ஆனால் தமது முழு உழைப் பையும் அள்ளி வழங்கு பவராகையால், இவர்கள் உழைப்பாளிகளாக, அடுத்தவருக்குக் கீழ்ப் படிந்தே செயற்படுவர். சித்திரையில் பிறந்தவர் போல் தருணத்திற்கேற் ற தக்க முடிவுகளை நொடி யில் எடுக்கும் திறனற்றவர் கள்.பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும்போது பல வற்றையும் சிந்திப்பவரா கையால் தடுமாற்றத்திற் குள்ளாவர். எந்த வேலை யாயிருந்தாலும் திறம்படச் செய்து முடிப்பவ ரென்றாலும் நிதானமாகச் செய்யக் கூடியவ ராகையால் அவசரமாக முடிக்கவேண்டிய வேலை களை இவர் வசம் கொடுத்தலாகாது.

இவர்களிடம் ஆலோசனை கேட்பதை விட, உழைப்பைக் கேட்பதே உசிதம். தூண்டத் தூண்டச் சுடர்விடும் திரிபோல, இவரும், தூண்டிவிட்டால் பிரகாசிப்பார்.

இலட்சியம் என்ற சொல்லுக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. இவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் உழைப்பு ஒன்று மட்டுமே. புதிய காரியங்களை இவர்கள் தொடங்கிவைத்தல் சிறப்புத் தரும்.

வீண் விவகாரங்களில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால் தேடி வந்த வம்பை ஓட ஓட விரட்டுவார்கள். உழைப்பு ஒன்று மட்டுமே இவ ரை மேல் நிலைக்குக் கொண்டு செல்லும். புதிய வர்களிடம் மிக ஜாக்கிரதையாகப் பழகினா லும்கூட, பழகியபின் அவர்களின் நட்பு வட்டத் துக்குள் அனாயாசமாக நுழைந்து விடுவார்கள்.

வைகாசியில் பிறந்தவர்கள் ஆடம்பரப் பிரியர்களேயன்றி பேராசைக்காரர்கள் அல்லர். எதையும் அளவுடனேயே கையாள்பவராகையால் நோய்கள் எப்பொழுதும் இவரிடமிருந்து விலகி யே நிற்கும். ஆனாலும் பசி, தூக்கம் மறந்து கடின மாக உழைப்பதனால் ஜீரணம் தொடர்பான நோய் கள், இரத்தக் கொதிப்பு, கை, கால், இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிகள் தோன்றும். கிராம்பு, புளி, சர்க்கரை போன்றவை இவருக்கு அதிகம் தொந்த ரவு தரக்கூடியன.

இயற்கை உணவுகளான காய்கறிகள், பயறு, கடலை போன்ற தானியங்கள் போன்றன இவர் உடலுக்கு ஆரோக்கியம் தரும். வாய், தொண் டைப் பகுதிகளில் வலி, கட்டிகள் போன்றன அடிக் கடி தோன்றி மறையும். இவர்களுக்கு உடலுக்கும் கண்களுக்கும் போதிய ஓய்வு தரவேண்டும்.

கடின உழைப்பாளியானாலும் நிதானமாகச் செயற்படுபவர். மற்றவர்களின் கேலி, குத்தல் பேச்சுக்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வார்கள். பிடிவாதம் இருப்பினும் திருப்தியான மனோபா வம் உடையவராகையால், மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல், இவர் கோபம் கொண்டால் யாராலும் முன்னிற்க முடியாது. பிறர் செய்யும் குற்றங்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விடுவர். குற்றம் செய்தவர்களைத் தண்டித்தே தீரு வர். தமக்கென்றோ, எதிர்காலத்திற்கென்றோ சே மித்து வைப்பதில் அக்கறை செலுத்தாது, பிறருக்கு வாரி வழங்கிவிடும் பரோபகாரிகள்.

இவர்களின் அமைதியான இல்லற வாழ்க் கைக்கு, தை, புரட்டாசி மாதங்களில் பிறந்தவர் களை வாழ்க்கைத்துணை ஆக்கிக் கொள்ள வேண் டும். மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை நண்பரா கவோ, வாழ்க்கைத் துணையாகவோ அமைவரா யின், இவர்களுடன் ஒத்துப்போவது கடினம்தான். பணம் குவிந்துகிடக்கும் தொழில்களில் பணியாற் றும் அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர். வங்கி, அடகுக்கடை, பங்கு வர்த்தகம் போன்ற தொழிலகங்களில் இவர்களுக்குப் தொடர்புகள் இருக்கும்.

சொந்தமாகத் தொழில் செய்வதைவிட, மற்றை யோரின் பிரதிநிதியாகப் பணியாற்றின், அதிகப் பலன் கிடைக்கும். பேராசையோ, பற்றுதலோ இல்லாததால் இவருக்கு எதிர்ப்புகளும் குறைந்தே காணப்படும். இவரை நன்கறிந்தவர்கள் எப்பொ ழுதும் இவருக்குத் துணை செய்வர்.

வைகாசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் 6. நிறம், தூய்மையின் சின்னமாகிய வெண்மை.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்

காஞ்சி பெரியவர்
கலைஞர். டாக்டர். மு. கருணாநிதி

No comments:

Post a Comment